ரெட்டிமாங்குடியில் உலக மகளிர் தின விழா மற்றும் அட்சயபாத்திரம் தொடக்கவிழா

0
நம்ம திருச்சி-1

லால்குடி- மார்ச் 9

லால்குடியை அடுத்த ரெட்டிமாங்குடியில் உலக மகளிர் தின விழா மற்றும் அட்சயபாத்திரம் தொடக்கவிழா நடைபெற்றது. திருச்சிமாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியம் ரெட்டிமாங்குடியில் உலக மகளிர்தின விழா நடைபெற்றது. விழாவில் மகளிருக்கான விளையாட்டு போட்டிகள் பாட்டு போட்டிகள் கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாரட்டினார்கள்.

விழாவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(ஓய்வு)கிருஷ்ணவேணி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ரோசன்பானு மற்றும பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு தலைவி அண்ணக்கிளி மற்றும் செயலாளர் கோகிலா பொருளாளர் சந்திரா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் விழாவில் முல்லை மகளிர் குழு,வளர்பிறை மகளிர் குழு, மாங்கனி மகளிர் குழு, பாசமலர் மகளிர் குழு, வசந்தம் மகளிர் குழு, மண்ணல் மகளிர் குழு, புது மலர் மகளிர் குழு,செம்பருத்தி மகளிர் குழு, சிந்தனை சிற்பிகள் மகளிர் குழு, சாமந்திபூ மகளிர் குழுவிலிருந்து 500க்கு மேற்பட்ட மகளிர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கு மதி;ய உணவு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று முதல் ரெட்டிமாங்குடியில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு தினந்தோறும் மதிய உணவு வழங்கும் அட்சயபாத்திரம் திட்டம் தொடங்கப்பட்டது. விழா நிறைவில் ஊராட்சி செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.