யார் இந்தப் பெண்கள்?

0
நம்ம திருச்சி-1

சென்னை வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள ஒற்றைவாடை நாடகக் கொட்டகையில் தான் சூட்டப்பட்டது ஈ.வெ.ராவுக்கு பெரியார் என்ற பட்டம். பட்டம் சூட்ட முன்னின்ற பெண்கள் மாநாட்டு தலைவி திருவரங்க நீலாம்பிகை அம்மையார், மருத்துவர் தருமாம்பாள் அம்மையார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், மீனாம்பாள் சிவராஜ் அம்மையார், பண்டித நாராயணி அம்மையார், ராணி அண்ணாதுரை போன்றோர் திராவிட இயக்கத்தில் பெண்கள் அதிக முனைப்போடு இயங்கிய காலகட்டம் அது.

மொத்தம் 23 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முதல் தீர்மானம் பெரியார் என்ற பெயர் வழங்கல் பற்றியது. இந்தி எதிர்ப்பு தீர்மானம், விதவைப் பெண்கள் மறுமணம் பற்றிய தீர்மானம், குடியரசு, ஜஸ்டிஸ் முதலிய பத்திரிகைகளை படிக்க வேண்டும் என்பது, சித்த மருத்துவத் துறை மேம்பாடு, ஓர் அணா, நாலு அணா, நிக்கல் நாணயங்களை மதிப்பிழப்பு செய்ததை தமிழில் மக்களுக்கு விளக்கக் கோரல், சென்னை பீச், ஃபோர்ட், பார்க் என்று இருந்த ரயில் நிலையங்கள் பெயர்களை கடற்கரை, கோட்டை, பூங்கா என்று முறையே மாற்றக் கோரிக்கை என்று பல தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

நிவேதிதா லூயிஸ் முகநூல் பக்கத்திலிருந்து…

Leave A Reply

Your email address will not be published.