மத்திய அரசு நீக்கச் சொன்ன 11 யூடியூப் வீடியோக்கள்!

0
நம்ம திருச்சி-1

இந்தியத் தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் வேண்டுகோளின்படி, இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பற்றிய தகவல்கள் அடங்கிய 11 வீடியோக்களை நீக்கம் செய்திருக்கிறது யூடியூப்.

அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவரைப் பற்றிய முக்கியமான தகவல்கள் அடங்கிய பல வீடியோக்கள் யூடியூபில் வெளியாகத் தொடங்கின.

பல சமூக வலைதளங்களுக்கும் அது பரவுவதற்கு முன்பே, தகவல் தொடர்புத் துறை மூலமாக கூகுளிடம் பேசியிருக்கிறது மத்திய அரசு. அதன் எதிரொலியாக, குறிப்பிட்ட 11 வீடியோக்கள் நிரந்தரமாக யூடியூபிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

“சட்டத்துக்குட்பட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் தகவல்களை யூடியூபிலிருந்து நீக்குவதில் பாரபட்சம் காட்ட மாட்டோம்” என்று தெரிவித்துள்ளது யூடியூப்.

Leave A Reply

Your email address will not be published.