திருச்சியில் வைகோ ஏன் போட்டியில்லை !

0
நம்ம திருச்சி-1

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்று வந்த செய்திகளுக்கு, வைகோவின் திருச்சியை மையமாக வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் வலு சேர்த்தன. ஆனால் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘திருச்சியில் நான் போட்டியிடப் போவதாக வரும் செய்திகள் யூகம்தான்’ என்று பதில் அளித்திருக்கிறார்.
கடந்த இரண்டு மாதங்களாகவே திருச்சியை மையமாக வைத்து சுழன்று வந்த வைகோ ஏன் இதுமாதிரி பேசுகிறார் என்று விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன.

 

“வைகோ தனக்கு ஒன்று, கணேசமூர்த்திக்கு ஒன்று என இரு சீட்டுகளை திமுக கூட்டணியில் கேட்கிறார். வழக்கம் போல் விருதுநகர் தொகுதியில் தான் நிற்லாம் என்று முன்பு வைகோ கருதிய நிலையில் மாணிக் தாகூர், ‘அண்ணாச்சி… நான் விருதுநகர் கேக்குறேன்’ என்று வைகோவிடம் முன்பே சொல்லிவிட்டாராம். இதற்குமேலும் விருதுநகரில் நிற்க வைகோவும் விரும்பவில்லை.
இதையடுத்துதான் திருச்சியை பற்றி யோசிக்க ஆரம்பித்து நிர்வாகிகளிடம் ஆலோசனைக் கேட்டார் வைகோ. அதேநேரம் திருச்சியை திருநாவுக்கரசருக்கு தருவதற்காக ஸ்டாலின் உறுதி அளித்திருப்பதாக வைகோவுக்கு தகவல் கிடைத்தது. அதன் பின் கனிமொழி மூலம் பேசி வைகோவுக்கு திருச்சி தொகுதியை பெற்றுத் தரவும் ஏற்பாடுகள் நடந்தன.

 

இந்நிலையில் ஸ்டாலினிடம் வைகோ திருச்சி பற்றி கேட்டு வைக்க, மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசித்துவிட்டு சொல்வதாக ஸ்டாலின் சொன்னாராம். அதன்படி மாசெவான முன்னாள் அமைச்சர் நேருவிடம் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

நேரு, வைகோ போட்டியிடுவது பிரச்சனை இல்லை. ஆனால் அவர் பின்னால் இருக்கும் வீரபாண்டியன் பண்ணும் அரசியல் தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தும் என்று கள நிலவரத்தைச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து ஸ்டாலினும் திருச்சியை வைகோவுக்கு கொடுக்க யோசித்து வருகிறாராம்.
இதற்கு இடையில் வீரபாண்டியன் புத்தக வெளியீட்டு விழாவில் நடத்திய அரசியலில் சொந்த மதிமுக கட்சியினர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இடையே பெரிய பிரிவினையை ஏற்படுத்த இது மேலும் வைகோவிற்கு தனிப்பட்ட முறையில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இதனால் ஸ்டாலினும் வைகோவிடம் திருச்சி உங்களுக்கு சரியா இருக்காது. இந்தத் தகவல் வைகோவுக்கு கிடைத்ததை அடுத்தே, ‘நான் திருச்சியில் போட்டியிடப் போவதாக வந்த தகவல்கள் யூகம்’ என்று மறுத்து வருகிறார் வைகோ.

Leave A Reply

Your email address will not be published.