உ லகின் மிக பிரமாண்டமான மஹாசிவராத்திரி விழா என்றால் எது ?

0
நம்ம திருச்சி-1

உ லகின் மிக பிரமாண்டமான மஹாசிவராத்திரி விழா என்றால் அது, கோவை ஈஷா யோகா மையத்தில் நடப்பது தான். நடப்பாண்டும், ஈஷாவின் 25-வது மஹாசிவராத்திரி என்பது கூடுதல் சிறப்பாகும். விழாவில் 42-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர்.

நடப்பாண்டு சிறப்பம்சங்கள்  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஈஷா மஹாசிவராத்திரி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தருகிறார். தியானலிங்கத்தில் நடக்கும் சக்திவாய்ந்த பஞ்ச பூத ஆராதனையில் சத்குருவுடன் பங்கேற்கிறார். மேலும், லிங்க பைரவி, சூர்ய குண்டம் உட்பட இடங்களுக்கு சென்று விட்டு மஹாசிவராத்திரி விழா நடக்கும் இடத்திற்கு வருகை தருகிறார். அங்கு, புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த நம் ராணுவ வீரர்களின் நினைவாக, மரக் கன்றுகளை நட உள்ளார்.சத்குருவின் அருளுரை, சக்திவாய்ந்த நள்ளிரவு தியானம், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி மஹா யாத்திரை, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் தலைசிறந்த கலைஞர்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள், சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் என, பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன.

 

குறிப்பாக, தேசிய விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் அமித் திரிவேதி, பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று இசை விருந்து படைக்க உள்ளனர். விழாவை மேலும் அழகூட்ட, 100க்கணக்கான நாட்டு மாடுகள் பங்கேற்கும் கண்காட்சி, தலைப்பாகை கட்டுதல், வீதி நாடகங்கள், பல்வகை சேலை உடுத்தும் பயிற்சி, பல மாநில உணவு அரங்கங்கள் உட்பட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மக்களின் கண்ணை கவரும் விதமாக ஆதியோகி குறித்த பிரத்யேகமாக ‘லேசர் ஷோ’ ஒன்றும் நடத்தப்பட உள்ளது.ருத்ராட்ச பிரசாதம்ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சம், புனிதமான மஹாசிவராத்திரி நாளன்று ஈஷா மையத்துக்கு நேரில் வருபவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதை பூஜை அறையில் வைக்கலாம், விசேஷ நாட்களில் அணிந்து கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.