சம்பள பணம் உங்கள் கையில் நிலைக்க செய்ய வேண்டியது இது தான் !

0
நம்ம திருச்சி-1

நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் லட்சங்களில் சம்பாதித்தாலும் ஆயிரங்களில் சம்பாதித்தாலும் எப்போதும் பட்ஜெட்டில் துண்டு விழுவது நடந்து கொண்டே இருக்கும். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். இப்படி இருப்பவர்கள் சம்பளம் வாங்கிய உடன் செய்ய வேண்டிய விடயங்கள் சிலவற்றையும் செய்ய கூடாத விடயங்கள் சிலவற்றையும் பார்க்கலாம்.
சம்பளம் வாங்கியவுடன் நல்ல காரியங்களுக்காக அதில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் நாம் வருமானம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு முறை சம்பளம் வாங்கும்போதும் இயலாதவர்களுக்கென ஒரு பகுதி பணத்தை முடிந்து வைத்து கொள்ளலாம். இப்படி ஏழை எளியவர்களுக்கு உதவுவதால் விரயச்செலவுகள் கட்டுக்குள் வரும்.

 

சம்பாத்யத்தில் ஒரு சதவிகிதம் அல்லது இரண்டு சதவிகிதமாவது இவ்வாறு மற்றவர்களுக்கு உதவி செய்வதால் செல்வம் நம் வீடு தேடி வரும்
மாத செலவு செய்ய தொடங்குமுன் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வ கோயிலுக்கு ஒரு லிட்டர் எண்ணெய் அல்லது நெய் வாங்கி கொடுக்கலாம். அல்லது பூக்கள் வாங்கி கொடுக்கலாம். இதன் மூலம் தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். வருமானம் நிலைக்கும்.

சம்பளம் வாங்கிய உடன் மகாலட்சுமிக்கு உகந்த மல்லிகைப்பூக்களை வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்து வரவும். இப்படி செய்வதால் மஹாலட்சுமியின் பூரண அருள் உங்களுக்கு இருக்கும்.

மாத சம்பளம் கிடைத்த உடன் வீட்டிற்கு இனிப்புகள் வாங்கி செல்லுங்கள். வீட்டிற்கு இனிப்பு வாங்கி செல்வது என்பது சுப செலவு. இனிப்புகள் வாங்கியதும் முதலில் நீங்கள் சாப்பிட்டு விட்டு பின்பு மற்றவர்களுக்கு உண்ணக் கொடுங்கள்.
இதனை தவிர்த்து நீங்கள் கட்டாயமாக செய்ய வேண்டிய விடயம் என்னவென்றால் ஒரு பாக்கெட் கல் உப்பு வாங்கி வீட்டில் வையுங்கள். பின் சமையலுக்கு பயன்படுத்துங்கள். கல் உப்பில் மகாலட்சுமியின் பூரண அருள் குடியிருப்பதால் உங்களுக்கு வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு வளர ஆரம்பிக்கும்.

 

சம்பளம் வாங்கியவுடன் செய்ய கூடாதவை எது எனில் உங்கள் சம்பளத்தின் முதல் செலவை எரிபொருளுக்காக செலவு செய்யாதீர்கள். வண்டிக்கு பெட்ரோல் போடுவது தவிர்க்க முடியாமல் நடக்கும் விடயம்தான். ஆனாலும் சம்பள பணத்தின் முதல் செலவை இதற்காக செலவழிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்
அது மட்டும் இல்லாமல் மது , புகை பழக்கங்கள் உள்ளவர்களும் சம்பளப்பணத்தை செலவழிக்க ஆரம்பிக்கும்போது இதிலிருந்து ஆரம்பிக்க வேண்டாம்
மேற்சொன்ன வழிமுறைகளை முறையாக கடைபிடித்தால் லக்ஷ்மியின் பேரருள் கிடைக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் எல்லாம் நடைமுறையில் இருந்து மாறி சேமிப்பு வளரும். செல்வம் பெருகும்.

Leave A Reply

Your email address will not be published.