ஜாதக தோஷங்கள் நீங்க எளிய பரிகாரங்கள் !

0
நம்ம திருச்சி-1

ஒருவர் பிறக்கும்பொழுதே அவரவர் ஊழ்வினைக்குத் தக்கபடியும், முற்பிறப்பில் செய்த பாவ, புண்ணியத்தின்படியும் அவரவர் விதியை பிரம்மதேவன் நிர்ணயித்து விடுகிறார்.

அந்தவகையில் நம் முற்பிறவியில் செய்த பாவங்களுக்கு ஏற்ப தான் இந்த பிறவியில் தோஷங்களாக மாறி நம்மை ஆட்டிபடைகின்றது.
நாம் சில நற்காரியங்களை செய்வதன் மூலம் இந்த தோஷங்களில் இருந்து எளிதாக விடுபட முடியும்.

என்னவெல்லாம் செய்து தோஷங்களை போக்கலாம் என்று பார்ப்போம்.
நம்மால் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் ஆகியவற்றை கொடுப்பதன் மூலம் நம் தோஷங்கள் விலகும். இதை ஒரே ஒரு முறை கொடுப்பதால் பெரிதாக பயன் இல்லை. நம்மால் முடியும்போதெல்லாம் கொடுக்க வேண்டும். இதன் மூலன் சந்திர பகவானின் ஆசிகள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

வயதான ஏழைகள் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல விரும்பினால் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவுவது, ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவது போன்ற செயல்கள் மூலம் குருபகவானின் அருள் பெற்று தோஷங்கள் விலகும்.
செய்யும் தொழிலை தெய்வமாக மதிப்பது, நாம் வாழும் இடத்தையும், தொழில் செய்யும் இடத்தையும் தொட்டு வணங்கி பூமாதேவிக்கு மரியாதை செலுத்துவது, ஏழை பெண்களின் திருமண செலவிற்கு உதவுவது போன்ற செயல்கள் மூலம் தோஷம் விலகும்.
ஈமச்சடங்கை செய்யும் அளவிற்கு கூட வசதி இல்லாதவர்களுக்கு அதை செய்ய பணம் கொடுத்து உதவுவதன் மூலம் சனி பகவானின் ஆசிகளை பெறலாம்.

நோயுற்று, கோவில்களில் பிச்சை எடுக்கும் ஏழைகளுக்கு வயிறார சாப்பாடு போடுவது, ஏழைகளின் மருத்துவ செலவிற்கு உதவுவது போன்ற செயல்களை செய்வதன் மூலம் சூரிய பகவானின் ஆசிகளை பெறுவதோடு தோஷங்களும் விலகும்.
உடுத்த ஒரு நல்ல ஆடை கூட இல்லாத ஏழைகளுக்கு புதன் கிழமைகளில் ஆடைகளை தானமாக கொடுப்பது, ஏழைகளுக்கு புதன் கிழமைகளில் வயிறார சாப்பாடு போடுவதன் மூலம் புதபகவானின் அருள் பெறுவதோடு தோஷங்களும் விலகும்.

தீயவர்களோடு சேராமல் இருப்பது, நாகத்தை தெய்வமாக மதிப்பது, இக்கட்டில் இருக்கும் நாகத்தை காப்பது. யாரேனும் நாகத்தை கொன்றிருந்தால் அதற்கு பாலூற்றி எரிப்பது போன்ற செயல்கள் மூலம் ராகு மற்றும் கேது பகவானின் அருளை பெறுவதோடு தோஷங்களும் விலகும்.

Leave A Reply

Your email address will not be published.