மார்ச் 3-ல் மதிமுக பூத் கமிட்டி கூட்டம்

0
நம்ம திருச்சி-1

மதிமுக பொதுசெயலாளர் வைகோ இந்த முறை விருதுநகர் கைகொடுக்காது என்பதால் தனக்கு திருச்சி தான் தோதுப்படும் என்ற எண்ணத்துடன், தி.மு.க. தலைமையுடன் நேரடியாக பேச்சுவார்த்தையும் நடத்தி முடித்து, ஸ்டாலின் கொடுத்த உறுதிமொழி கொடுத்த அடிப்படையில் திருச்சி தொகுதி முழுவதும் கடந்த இரண்டு மாதமாக தொடர்ச்சியாக கூட்டங்களையும் நடத்தி கொண்டுயிருக்கிறார். இதை அவருடைய கட்சி தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்கிறார்கள்.

 

இதற்கு இடையில் முறைப்படியான கூட்டணி பேச்சுவார்த்தையின்போது மதிமுக மூத்த தலைவர்கள் முதல் சுற்று பேச்சுவார்த்தையில் 4 சீட்டு கேட்டதும். திமுக மறுத்த தகவலும் வெளிவந்த நிலையில் இதை பிரச்சனையாக்குவதற்கான வேலைகளில் சமூக ஊடகங்கள் இறங்கி வருகின்றன. இந்த நிலையில் தஞ்சை தி.க. பொதுகூட்டத்திற்கு திருச்சி விமானநிலையத்தில் வந்த வைகோ மதிமுக கட்சி முக்கியஸ்தர்களை தனிப்பட்ட முறையில் அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இந்நிலையில் வரும் மார்ச் 3-ம் தேதி திருச்சியிலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளது. இதுவரை யாருக்கு திருச்சி தொகுதி என்ற அறிவுப்பு வெளியாகாத நிலையில் பூத் கமிட்டி கூட்டம் நடத்த இருப்பது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கு இடையில் 1999 எம்.பி. தேர்தலில் லோக்கல் காங்கிரஸ் வேட்பாளர் அடைக்கலராஜை வீழ்த்தி தி.மு.க. கூட்டணியில் நின்ற பா.ஜ.க. வேட்பாளர் ரங்கராஜன் குமாரமங்கலத்தை ஜெயிக்க வைத்தார் நேரு. அதற்குப் பரிகாரமாக இந்தமுறை அடைக்கலராஜின் மகன் ஜோசப்லூயியை காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கினால், ஜெயிக்க வைக்கலாம் என்பது நேருவின் வியூகம். எந்த சர்ச்சையிலும் சிக்காத ஜோசப்லூயியை திருச்சியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், ஸ்டாலினிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார் நேரு. ஏற்கனவே ஸ்டாலின் குடும்பத்திற்கு அறிமுகமானவர், ராகுல்காந்தியை தலைவராக முன்மொழிந்த, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேரில் ஒருவர் இவர்.

 

இதெல்லாமே ஜோசப்லூயிக்கு சீட் கிடைக்க வாய்ப்பு பிரகாசமா இருக்கு என்கிறார்கள் இதை திருச்சியில் நடந்த முதல் ஆலோசனை கூட்டத்தில் பேசிய தலைவர்களும் உறுதி செய்தனர்.
இந்த நிலையில் தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை அப்துல்லா, முன்னாள் அமைச்சர் ரகுபதியின் மகன், மாநகர செயலாளர் அன்பழன், கே.என்.நேரு குடும்பத்தில் ஒருவர் இன்னும் சிலரும் வேட்பாளர் ரேஸில் குதித்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.