வீட்டில் பணம் குறையாமல் இருக்க வேண்டுமா?

0
நம்ம திருச்சி-1

உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால் சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன.
அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். லட்சுமிதேவி உங்களிடம் வந்து வீட்டில் குடி கொள்ளக் கூடிய வகையிலாக பரிகாரங்களசை் செய்து வந்தீர்கள் என்றால், நீங்கள் நினைத்ததை விடவும் அதிகப்படியான செல்வத்தை, உங்களை விட்டுப் போகாமல் இருக்கும்படியாக செய்ய முடியும்.

பச்சரிசியும் நாணயமும்
ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் முனை உடையாத (கைக்குத்தல்) பச்சரிசி அல்லது நெல்லை கொஞ்சமாக எடுத்துப் போடுங்கள்.
அதன் மேல் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை போடுங்கள். அதன் மேல் சிறிது அரிசியைப் போட்டுஇரண்டு ரூபாய் நாணயத்தை போடுங்கள்.

பின் மீண்டும் கொஞ்சம் அரிசி இட்டு ஐந்து ரூபாய் நாணயம், அதன்மேல் கொஞ்சம் அரிசி போட்டு பத்து ரூபாய் நாணயம் ஒன்று போட்டு அதன்பின், அரிசி பாட்டில் நிறையும் வரை அரிசியையோ நெல்லையோ போட்டு நிரப்புங்கள். பின் பாட்டிலை நன்கு இறுக்கமாக மூடி போட்டு மூடுங்கள். அந்த மூடியில் சிறிது சிறிதாக ஆறு துளைகள் போடுங்கள்.
இப்படி அரிசியும் நாணயமும் நிரம்பிய அந்த பாட்டிலை வீட்டின் அலுவலக அறை, பூஜை அறை, வரவேற்பறையில் வைக்கலாம்.

தொழில் செய்கின்ற வணிக சம்பந்தப்பட்ட இடங்கள் உங்களுக்கு இருந்தால் அங்கேயும் வைக்கலாம். பிரோ பக்கத்தில் வைப்பது இன்னும் சிறப்பு.
நீங்கள் வைக்கும் இடம் மட்டுமே இதற்கு முக்கியம் அல்ல. அந்த பாட்டில் தினமும் உங்களுடைய கண்களில் படும்படியாக இருப்பது மிகமிக அவசியம். இதன் மூலம் உங்களுடைய இருப்பிடத்தை தன ஆகர்ஷணம் மிக்க இடமாக மாற்ற முடியும்.
இப்படி ஒரு மாதங்கள் வரை வைத்திருக்கலாம். அதன்பின் ஒவ்வொரு மாதமும் அந்த பாட்டிலுக்குள் இருக்கும் அரிசியை பறவைகளுக்கு உணவாகப் போட்டுவிட்டு, மீண்டும் அதே பாட்டிலில் முன்பு குறிப்பிட்ட படியே அதே நாணயங்களைக் கொண்டு, மீண்டும் அரிசியால் நிரப்பி வையுங்கள்.

பிறகு பாருங்கள். லட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்துவிடுவாள்.
மாதம் ஒரு முறை அரிசியை பறவைகளுக்கு இட்டு பின் அதே நாணயங்களை வைத்து மாற்றவும். மிக விரைவாக பலன் தரக்கூடிய சூட்சும பரிகாரம் இது.

Leave A Reply

Your email address will not be published.