தொழிலாளர்களின் ஒற்றுமையே பலம் திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலித்தொழிலாளர்கள் சங்கத் தலைவர் எஸ். கந்தன்

0
ntrichy

அரியமங்கலத்தில் உள்ள பழைய பால் பண்ணை, மதுரை – திண்டுக்கல் சர்வீஸ் ரோட்டில் திருச்சி அனைத்து அழுகும் பொருள் கமிஷன் மண்டி வணிக வளாகம் திறப்பு விழா ஜூன் 3-ம் தேதி நடைபெற்றது. அந்த வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலித்தொழிலாளர்கள் சங்கத் தலைவர் எஸ். கந்தன் நம்ம திருச்சி சார்பாக சந்தித்தோம்…

 

திருச்சி மாவட்ட சுமைத்தூக்கும் கூலித் தொழிலாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டதன் நோக்கம்?

திருச்சி மாவட்டத்தில் ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு மேலாக வேரூன்றி வணிகர்களை ஏமாற்றி சூறையாடிய சாம்ராஜ்யம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, சாமானிய வணிகர்களும் உறுப்பினர்களாகவும் வணிகர்களின் துயரங்களைத்துடைக்கவும். அவர்களின் ஒற்றுமையை உணர்வை விதைக்கவேண்டுமென எண்ணி எல்லா வணிகர்களையும் ஒருங்கிணைத்து, தமிழ்நாடு வணிகர்களின் பேரவையாக இணைத்து செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டிலே ஒரு சிறந்த அமைப்பாக இதனை திருச்சியில் வழி நடத்தி செயல்படுத்திக் கொண்டிருப்பதில் எனது பங்கும் உண்டு என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.

 

சங்க உறுப்பினர்கள் குறித்து?

இராணுவத்தில் 25 ஆண்டு பணிபுரிந்து, வணிகர் சங்க அமைப்பிலும் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறேன். தொழிலாளர்களுக்காக எல்லாவற்றையும் கடந்த ஒரு அமைப்பை உருவாக்கி, அந்த உழைக்கும் வர்க்கத்திற்கு உதவியாக இருப்பதற்காக, திருச்சி வெங்காய மண்டியில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் பழைய பால்பண்ணையில் வாங்கப்பட்ட இடத்தில் திருச்சி மாவட்ட சுமைத்தூக்கும் கூலித் தொழிலாளர்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தில் 171 பேர் நிரந்தர உறுப்பினராகவும், 200 தொழிலாளர்கள் தற்காலிக பணியாளர்களாகவும் உள்ளனர்.

 

இந்த சங்கத்தில் வணிகர்களுக்கான பங்கு?

இந்த அமைப்பு உருவாக்கியதே வணிகர்கள் தான். ஏனெனில், முதலாளிகள் நினைத்தால்தான் தொழிலாளிகள் வேலை செய்ய முடியும். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே விரோத போக்குகளை இருக்கக்கூடாது. 1991-ம் ஆண்டு உலக மயமாக்களுக்குப் பிறகு தொழிலாளர்கள் நசிந்து கொண்டு வருகின்றனர். வேலை கிடைப்பதே இங்கு மிகவும் கடினமாக உள்ளது. எனவே, முதலாளி மற்றும் தொழிலாளிக்கும் இடையே நல்ல அணுகுமுறை தேவை. இது இந்த சங்கத்தில் இருக்கும்.

 

எந்த அளவிற்கு கட்டுப்பாட்டுடன் சங்கத்தை வழிநடத்துகிறீர்கள்?

இந்த அமைப்பால் மாமுல், டீ செலவு என்று லாரி டிரைவர்களை துன்புறுத்தக்கூடாது.
அனுமதியில்லாமல் பொருட்களை வெளியே எடுத்துச் செல்ல தொழிலாளர்கள் உதவி செய்யக் கூடாது.
மேலும், தொழிற் சங்கங்களில் இருப்பவர்கள் தங்களது பெயருக்காக தொழிலாளர்களை திசைதிருப்பி வேலைகளை இழக்க வழி வகை செய்யக்கூடாது என்ற பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.
தொழிலாளர்களின் ஒற்றுமையே பலம் என்பதை உணர வேண்டும். மேலும், அவர்களின் எதிர்காலம், குழந்தைகள், குடும்பம் என அனைத்தையும் கருத்தில் கொண்டு மதுபழக்கத்தை முற்றிலுமாக கைவிடவேண்டும் என்று அறிவுறுத்துகின்றோம்.

Leave A Reply

Your email address will not be published.