MBA பட்டதாரிக்கு ஓர் ஆண்டு குண்டர்

0
ntrichy

 

 

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தாத்தையங்கார்பேட்டை வடுகர் தெருவை சேர்ந்த பாஸ்கரன் மகன் மனோஜ்குமார் (வயது 31) என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜீயாவுல்ஹக் IPS மற்றும் பொறுப்பு காவல் துணை கண்காணிப்பாளர்  அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓர் ஆண்டுக்கு சிறையில் வைக்க உத்தரவிட்டார்.

 

மனோஜ்குமார்ன் என்ற வாலிபர் MBA வரை படித்து திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ஆரம்பத்தில் பாண்டிசேரி மது பாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தவர் சிறையில்  ராஜேஷ் தாத்தையங்கார்பேட்டை ஏற்பட்ட நட்பினால் ஒன்று சேர்ந்து 2017-ம் ஆண்டில் பெண்களிடம் தாலி செயினை பறித்ததால் V.களத்தூர் ,மங்களமேடு,பெரம்பலூர்,மருவத்தூர்,குண்ணம்,கைகளத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யபட்டு விசாரணையில் உள்ளது.

 

2018 ஆம் ஆண்டு நெய்குளம்,புதூர்உத்தமனூர் ஆகிய இடங்களில் தனியாக வந்த பெண்களிடம் மனோஜ்குமார் தாலி செயினை பரித்ததால் சிறுகனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மனோஜ்குமாரை தேடி வந்த நிலையில் 10.05.2018-ம் தேதி கைது செய்து சுமார் 5 பவுன் தாலி செயினை மீட்டனர்.தற்போது எதிரி மனோஜ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.