பழங்காலப் பொருட்களின் அலங்காரம் பொறியியல் பட்டதாரியின் ஆர்வம்

0
ntrichy

பழங்காலப் பொருட்களின் அலங்காரம் பொறியியல் பட்டதாரியின் ஆர்வம்

 

வரலாற்றின் சான்றாக என்றுமே பழமையான நீடித்து இருக்கும், அந்த அடிப்படையில் பார்க்கும் போது மக்கள் மத்தியில் பழங்காலப்பொருட்களுக்கு இருக்கும் மவுசு எப்போதும் குறையாத ஒன்று. அந்த வகையில், தனது இல்லம் முழுவதிலும் பழங்காலத்துப்பொருட்களை கொண்டு அலங்கரித்துள்ளார் திருச்சி பொன்மலைபட்டியை சேர்ந்த சரவணன்.

பொறியியல் பட்டதாரியான இவர் சிறு வயதிலிருந்தே பழங்கால பொருட்களை சேகரிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர். தனது வீட்டு மாடியில் உள்ள இரண்டு அறைகளில் பழம்பெரும் பொக்கிஷங்களை சேகரித்து வருகிறார். குறிப்பாக, நூறு வருடம் பழமையான 75-க்கும் மேற்பட்ட கடிகாரங்கள், இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட லாந்தர் விளக்குகள், பூட்டுகள், மரபொம்மைகள், 1940களில் பயன்படுத்தப்பட்ட ஹார்மோனியப்பெட்டி, பியானோ, பழமையான கேமரா, கிராமபோன் என இவருடைய சேமிப்புகள் நம்மை பிரமிக்கவைக்கிறது.

 

இது குறித்து சரவணன் கூறியதாவது, “நான் கல்லூரி முடித்து 8 வருடங்களுக்கு மேலாகிறது. இன்ஜினியரிங் முடித்துவிட்டு சுய தொழிலாக வாசனை பொருட்கள் ஏற்றுமதி செய்துவருகிறேன்.
சிறு வயது முதலே பழமையான பொருட்களை தேடி சேகரிப்பதில் அதிகளவு ஆர்வம் இருந்தது. பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததும், அதிகளவில் பொருட்களை வாங்கி சேகரிக்க ஆரம்பித்தேன். சில நேரங்களில் பழமையான பொருட்கள் கிடைக்கும் என்று சென்று ஏமாந்தும் உள்ளேன்.

 

பெரும்பாலும் இரும்புக்கடைகளில் முன்கூட்டியே செல்லி வைத்து வாங்குவேன். சென்னையில் மூர் மார்க்கெட்டில் பழமையான பொருட்களுக்கு தெருவோர கடைகளே உள்ளது. அதிலும் உண்மையான பொருட்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இவற்றை மக்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என்பது தான் எனது ஆசை. பழமையான பொருட்கள் என்பதால் பராமரிப்பதும், இடம் மாற்றுவதும் சற்று கடினமாக உள்ளது, மேலும் நான் சேகரிக்கும் பொருட்களை வைக்க இடம் பற்றாமலும் போய்விடுகிறது ” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.