உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  பெல்லில் 4500 மரக்கன்றுகள் நட திட்டம்

0
ntrichy

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு

 பெல்லில்(BHEL) 4500 மரக்கன்றுகள் நட திட்டம்

 

உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், திருச்சி பெல்லில்(BHEL) மரம் நடும் இயக்கத்தின் தொடக்க விழா நடந்தது.

இவ்விழாவில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லட்சுமி தலைமை வகித்தார். மேலும், பெல் திருச்சி, திருமயம், சென்னை ஆகியவற்றின் செயலாண்மை இயக்குநர் ராஜாமனோகர் மரக்கன்றை நட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, அனைத்து விதமான மாசுக்களையும் தவிர்ப்பது ஒரு வாழ்வியல் முறையாக மாற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

விழாவில், ஊழியர்களுக்கு சுற்றுச்சூழல் உறுதிமொழியையும் ஆங்கிலத்தில் ஏற்றனர். இதில், பலவகையான 4,500 மரக்கன்றுகளை திருச்சி பெல் வளாகத்தில் நடதிட்டமிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.