திருச்சி அன்பு பாரா மெடிக்கல் அறிவியல் கல்லூரியின் இரண்டாமாண்டு தொடக்க விழா

0
ntrichy

திருச்சி அன்பு பாரா மெடிக்கல் அறிவியல் கல்லூரியின் இரண்டாமாண்டு தொடக்க விழா..,

திருச்சி அன்பு பாரா மெடிக்கல் அறிவியல் கல்லூரியின் இரண்டாமாண்டு தொடக்க விழா அண்மையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையை அன்பு பாரா மெடிக்கல் கல்லூரியின் இணை இயக்குனர். சரவணன் கூறி தொடங்கி வைத்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வெக்காளியம்மன் கல்வியால் கல்லூரியின் முதல்வர் டாக்டர். சரவணன் பேசியபோது எளிமையான மாணவர்களும் எளிய முறையில் படித்து வேலை வாய்ப்பினை பெற்று வாழ்வில் வெற்றிப்பெற அன்பு பாரா மெடிக்கல் அறிவியல் கல்லூரி வாய்ப்பினை வழங்கியுள்ளது அதனை மாணவர்கள் சரியாக பயன்படுத்தி வாழ்நாளில் வெற்றிப்பெற வேண்டும் என்று மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் அன்பு பாரா மெடிக்கல் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அகிலா கலந்துகொண்டு பேசிய போது ‘மாணவர்கள் எந்த ஒரு படிப்பு படித்தாலும் அவற்றில் ஒரு ஈடுப்பாட்டுடன் படிக்க வேண்டும்,அதுவே உங்களை அடுத்தக்கட்ட வெற்றியை நோக்கி கொண்டு செல்லும் என்றுக்கூறினார். மேலும் மாணவர்களான நீங்கள் அனைவரும் இக்கல்லூரியில் படித்து வாழ்நாளில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் நன்றியுரையை ஆசிரியை ரேவதி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

.

Leave A Reply

Your email address will not be published.