தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை அனைத்தும் பொய்கள் நிறைந்த ஆவணமாகவே உள்ளது – உ.வாசுகி குற்றச்சாட்டு

0
ntrichy

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை அனைத்தும் பொய்கள் நிறைந்த ஆவணமாகவே உள்ளது – உ.வாசுகி குற்றச்சாட்டு

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமை பாதுகாப்பு குழு சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த கள ஆய்வறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வாசுகி திருச்சியில் இன்று வெளியீட்டார்.

அதில்

கலவரம் தொடர்பாக உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு நடத்த வேண்டும்.

துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட அதிகாரி மற்றும் காவல்துறையினரை பணிநீக்கம் செய்து கொலை வழக்கு பதிவு செய்வதுடன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள இடத்தை அரசே கையகப்படுத்த வேண்டும்.

ஆலையால் இதுவரை ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீட்டை ஆலை நிர்வாகத்திடமிருந்தே பெற வேண்டும்.

காவல்துறை தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையையும், இழப்பீட்டையும் அளிக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்துள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வாசுகி,

தூத்துக்குடி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.காயம்பட்டவர்கள் சிகிச்சை பெறவே பயப்படுகின்றனர்.இரவு நேரங்களில் கைது நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.

தனக்கு தெரிந்த சமூக விரோதிகள் குறித்த தகவலை அரசிடம் ஒரு நல்ல குடிமகனாக ரஜினிகாந்த் கொண்டு சென்று இருந்திருக்க வேண்டும்.

சி.பி.சி.ஐ.டி விசாரணையிலும்,ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணையிலும் நம்பிக்கை இல்லை.உயர்நீதிமன்றம் தன் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும்.

துப்பாக்கி சூட்டிற்கு முன் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த விவகாரம் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பொய்கள் நிறைந்த ஆவணமாகவே உள்ளது.எனவே இவற்றை முறையாக விசாரிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

பேட்டி: வாசுகி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

Leave A Reply

Your email address will not be published.