தவறான சிகிச்சை அளித்ததால் காயங்களுடன் இறந்த சிசு-உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முற்றுகை

0
ntrichy

தவறான சிகிச்சை அளித்ததால் காயங்களுடன் இறந்த சிசு-உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முற்றுகை

 

 

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் பைசல்(31).மத்திய பேருந்து நிலையம் பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் இவருடைய மனைவி ராபியத்துல் பஷிரியா(25)வை தலை பிரசவத்திற்க்காக அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதித்துள்ளார்.இந்நிலையில் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.அறுவை சிகிச்சையில் சிசுவானது உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் எடுத்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் உறவினர்கள், மருத்துவர்கள் அலட்சியமாக இருந்து தவறான சிகிச்சை அளித்ததால் தான் குழந்தை இறந்து விட்டது என கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.