திருச்சி மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து நடத்தும் டென்னிஸ் போட்டி.

0
ntrichy

திருச்சி மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து நடத்தும் டென்னிஸ் போட்டி.

திருச்சி மாநகரில் முதல் முறையாக திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல் துறையும் இணைந்து நடத்தும் இளையோருக்கான மாநில அளவிலான ஓபன் டென்னிஸ் போட்டிகள் வரும் மே 17-ஆம் தேதி முதல் 20 தேதி வரை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைப்பெற உள்ளது. மேற்படி இப்போட்டியில் 500-க்கும் மேற்பட்ட தலைசிறந்த போட்டியாளர்கள் மற்ற மாவட்ட மற்றும் மாநிலங்களிலிருந்து கலந்து கொள்ள உள்ளார்கள். மேலும் டென்னிஸ் போட்டியானது 3 பிரிவுகள் 12,14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட ஆண், பெண் விளையாட்டு வீரர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் மிகவும் சிறப்புடன் நடத்தப்பட உள்ளது.

போட்டியில் வெற்றி பெரும் டென்னிஸ் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.20,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ.1000 என தனித்தனி பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.