11 வருட போராட்டத்திற்க்கு பிறகு அடையாளத்தை மாற்ற கிடைத்த கடை-திருநங்கை கஜோல்

0
ntrichy

11 வருட போராட்டத்திற்க்கு பிறகு அடையாளத்தை மாற்றா கிடைத்த கடை-திருநங்கை கஜோல்

 

பொதுவாகவே எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் பெண்கள் சாதித்து தங்களை நிலை நாட்டிக் கொள்வது என்பதே போரட்டங்கள் நிறைந்தது. இதில் திருநங்கைகள்  என்றால் சொல்லவே வேண்டாம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மிகுந்த போராட்டங்களை சந்தித்து வரும் இவர்களுக்கு சமூகத்திலிருந்து வரும் புறக்கணிப்புகளும், இன்னல்கள்களும் துயரத்தில் ஆழ்த்துகின்றன. திருநங்கைகளுக்கு எல்லா வகை திறமைகளும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனாலும், இந்த சமூகத்தில் திருநங்கைகளின் திறமைகள் தொடர்ந்து குழிதோண்டி புதைக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன.

 

திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள், கைகளை தட்டி காசு வாங்குபவர்கள் என்று சமூகத்தால் அடையாளப் படுத்தப்பட்டுவிட்டனர். சமூகத்தின் பார்வையில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக்கப்படும் திருநங்கைகள் தங்கள் வாழ்வில் விடா முயற்சியோடு செயல்பட்டால் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழமுடியும் என்பதை நிரூபித்துள்ளனர் திருச்சியை சேர்ந்த ஏஞ்சல் திருநங்கைகள் சுய உதவிக்குழுவினர்.

 

திருநங்கைகளின் வாழ்வில் உருவாகி வரும் புதிய மாற்றங்களை அங்கீகரிக்கும் விதமாக திருச்சியில் முதன்முறையாக மகளிர் திட்டத்தின் மூலம் திருநங்கைகளின் சுய உதவிக்குழுக்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உருவாக்கி தரப்பட்டுள்ளது.

 

பேன்சி ஸ்டோர் மற்றும் குளிர்பானக்கடை தொடங்க எண்ணிய ஏஞ்சல் திருநங்கைகள் சுய உதவிக்குழுவினர் மாவட்ட  ஆட்சியர் ராசமணியிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் கடை ஒதுக்கி தர உத்தரவிட்டார். இதனை தங்களின் முயற்சிக்கும், வாழ்க்கைக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகின்றனர் திருநங்கைகள் சுய உதவிக்குழுவினை சேர்ந்த திருநங்கைகள்.

 

இது குறித்து பேசிய திருநங்கை கஷோல் கூறியதாவது, இந்த இடத்தில் எங்களுக்கு கடை கிடைத்தது 11 வருட போராட்டம்.இப்போது சூஸ் ஷாப்பாகவும், கவரிங் விற்பணை இடமாகவும் உள்ளது. இந்த கடையை நாங்கள் மல்டிபில் ஷாப்பாக தான் திறந்துள்ளோம். கூடிய சீக்கிரத்தில் பார்லராகவும், காட்டன் புடவைகள் விற்கும் இடமாகவும் மாற்றவுள்ளோம். இப்போது தான் பொதுமக்கள் வர ஆரம்பித்துள்ளனர். எங்களை போன்ற திருநங்கைகள் சுயமரியாதையோடு சுயதொழில் செய்யவேண்டும் என்பதே எனது விருப்பம்.

Leave A Reply

Your email address will not be published.