பிரானிகள் சந்தையாக மாறிய ரயிவே பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட  பொன்மலை சந்தை 

0
ntrichy

பிரானிகள் சந்தையாக மாறிய ரயிவே பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட  பொன்மலை சந்தை

 

1926ல் நாகப்பட்டினத்தில் செயல்பட்டுவந்த ரயில்வே பணிமனை, திருச்சி பொன்மலைக்கு மாற்றப்பட்டது. இங்கு 11 லட்சத்து 12 ஆயிரத்து 460 சதுர அடியில், ரயில்வே பணியாளர் குடியிருப்பு ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய நான்காயிரம் வீடுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த நகரத்தில், பணியாளர்களின் பதவிக்கேற்ப வீடுகள் ஒதுக்கப்பட்டன.

இதற்கான 8 வகையான வீடுகள் இங்கு கட்டப்பட்டன. அனைத்து வீடுகளுக்கும் புதைச் சாக்கடை, குடிநீர் குழாய் வசதிகளுடன் பூமிக்கடியில் செல்லும் கம்பிவழியாக மின்சாரமும் வழங்கப்பட்டது. எட்டு வகை குடியிருப்புக்கும் தனித்தனியாக  பூங்கா, சிறிய விளையாட்டு திடல், தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்பட்டன.

தொடக்கப் பள்ளிகள் தவிர, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் படிக்க இந்தக் குடியிருப்புக்குள் இரண்டு மேல் நிலைப் பள்ளிகளும் அமைக்கப்பட்டன. குடியிருப்பின் நடுவில் வாரச்சந்தைக்கு இடம் விடப்பட்டு ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தை கூடியது.  அதுவே பொன்மலை சந்தை என

அழைக்கப்படுகிறது.

 

இங்கு ரயில்வே பணியாளர் குடியிருப்பில் இருப்பவர்களுக்கான அனைத்து வகையான பொருட்களும் கிடைக்கும், காலப்போக்கில் பிராணிகள்

வாங்க, விற்க திருச்சியில் ஒரு இடமாக பொன்மலை மாறியது. இங்கு அறியவகை நாய்கள், கிளிகள், எலிகள், கோழிகள் என எல்லா வகையான வளர்ப்பு பிராணிகளும் கிடைப்பதால் திருச்சி மக்களின் நல்வரவேற்பை பெற்றிருக்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.