திருச்சியில் சினிமா இயக்குநர் கரு.பழனியப்பன் மே – 1 அவிழும் உண்மைகள்

0
ntrichy

2ஜி அவிழும் உண்மைகள்

 

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு
வானம் அமைப்பின் சார்பில் உடைக்க உடைக்க முளைக்கும் நிகழ்ச்சி
கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள திருச்சி
கலைஞர் அறிவாலயத்தில் மே 1-ம் தேதி
மாலை 5 மணிக்கு ‘2ஜி அவிழும் உண்மைகள்’ புத்தக ஆய்வரங்கம் நடைபெறுகிறது.
ஆய்வரங்கத்தில் கவிஞர் நந்தலாலா தலைமை வகிக்கிறார். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார். திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், திராவிடகழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய 2ஜி அவிழும் உண்மைகள் புத்தகம் குறித்து பேருரையாற்றுகிறார். முன்னதாக ப.குமாரவேல் வரவேற்க, மு.நடராஜன் நன்றி கூறுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.