பத்திரிகையாளர்கள் மீது பாயும் கத்தி திருச்சியில் திரும்பும் இடமெல்லாம் கத்திக்குத்து

0
ntrichy

பத்திரிகையாளர்கள் மீது பாயும் கத்தி திருச்சியில் திரும்பும் இடமெல்லாம் கத்திக்குத்து

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் செங்குளம் காலனியைச்  சேர்ந்தவர் விக்னேஷ்வரன்(32). இவர் தனியார் தொலைகாட்சி ஒன்றில் கேமரா மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் பாலக்கரை மீன்மார்க்கெட் அருகே உள்ள டூ விலர் மெக்கானிக்கடையில் தனது வண்டியை சரி செய்து விட்டு உறவினர் ஒருவருடன் வரகனேரி அல்முகமதுயா பள்ளிவாசல் வழியாக சென்றகொண்டிருந்தார்.  அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கத்தியைக்காட்டி மிரட்டி வண்டியை விட்டு இறங்க சொல்லியுள்ளான். வண்டியை விட்டு இறங்கிய விக்னேஷ் கழுத்தில் கத்தியை வைத்து ஒரு இருட்டு சந்துக்குள் கொண்டுச்சென்று அடித்து செல்போன், கேமரா உள்ளிட்ட உடைமைகளை பறித்து கத்தியால் விக்னேஷின் வயிற்றில் குத்திவிட்டுச்  ஒடியுள்ளான்.

உடனே  அருகில் இருந்த மக்கள் விக்னேஷை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து மார்க்கெட் காவல் நிலையத்தில் விக்னேஷ் கொடுத்த புகாரில் பேரில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வரகனேரி ஆரோக்கியசுசில்குமாரின் மகன் அஜித்(21) இக்குற்றச் செயலில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.

உடனே அஜித்தின் வீட்டிற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அங்கிருந்த செல்போன் மற்றும் கேமராவை கைப்பற்றினர். காவல் துறையினர் வருவதற்குள் தப்பயோடிய அஜித்தை தேடிவருகின்றனர். இது குறித்து அஜித்தின் தந்தை ஆரோக்கியசுசில்குமாரை விசாரிக்கையில் அஜித் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துபவர் என்றும் போதையில் இது போன்ற செயல்களை தொடர்ந்து செய்துவருவதும் தெரியவந்தது. அவன் மீது குற்றப்பிரிவு 392 -ன் கீழ் முதல் தகவலறிக்கையை போலீசார் பதிந்தனர்.

இதேபோல், திருச்சி மத்தியபேருந்துநிலையத்தில், ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் தெருவைச்சேர்ந்த தனியார் தொலைக்காட்சி மேலாளராக பணிபுரியும் தினேஷ்குமார் என்பவர் தான் திருமணம் செய்துக்கொள்ள இருக்கும் பெண்ணுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தான் சி.பி.ஐ அதிகாரி என்றுகூறி தினேஷிடம் அடையாள அட்டையை கொடுங்கள் வண்டி லைசன்ஸ் எடுங்க என மிரட்டியுள்ளார். தினேஷ் தான் பத்திரிக்கையாளர் என கூறி அடையாள அட்டையை காட்டியுள்ளார். உடனே கையில் உள்ள பட்டன்கத்தியை எடுத்து மிரட்டி அந்த இடத்தை விட்டு நழுவ முயற்சி செய்துள்ளான். அப்போது, அருகில் இருந்த மக்கள் அந்த நபரை கண்ட்டோன்ட்மென்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிறகு காவல்துறையினர் விசாரிக்கையில், அந்த நபர் குடிபோதையில் இருந்ததும்,   வயலூர் இராமலிங்கநகரைச் சேர்ந்த ஜான் என்பவரது மகன் ரிச்சர்டு  என்பதும் தெரியவந்தது. மேலும், விசாரிக்கையில் இவரது தந்தை ரயில்வேயில் டி.டி.ஆராக இருந்து ஒய்வு பெற்றவர் என்பதும், ரிச்சர்டு ஜங்சன் பகுதியில் உள்ள ஆலம்ரெஸ்டாரெண்டில் பணியாற்றிவந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் இவர் திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார். மன அழுத்தம் காரணமாக இது மாதிரியான செயல்களில் ஈடுப்பட்டதாக காவல் துறையினர் கூறினார்.

இது போன்ற தொடர்வழிப்பறிசம்பவம் திருச்சி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் நடப்பதற்கு கூட மக்கள் அச்சப்படுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.