அப்லேக் எனும் வீரன்

0
ntrichy

அப்லேக் எனும் வீரன்

 

திருச்சி சாலைகளில் வாகன ஓட்டிகள் சரசர என அதிவேகமாக சென்றுகொண்டிருக்க, ஹாயாக ரேக்ளா குதிரை வண்டியில்  “நெஞ்சமுன்டு நேர்மையுண்டு ஓடு ராஜா”  எம்.ஜீ.ஆர் பாணியில் தனது மகனுடன் குதிரை ரேஸ் வண்டி  ஓட்டி சென்ற முகமது ஹிலால்லை நம்ம திருச்சிக்காக சந்தித்தோம்.

இவன் பேரு அப்லேக். 8 வயசாச்சு, ஆந்திராவில இருந்து வாங்கி நானே வளர்ந்தது. குழவாய்பட்டில முதல் பரிசு வாங்கினது நம்ம குதிரை.

எத்தனை வருடமாக ரேஸ் வண்டி ஓட்டிறீங்க?

எங்க தாத்தா காலத்தில இருந்தே பாரம்பரியமா ரேஸ் வண்டி ஓட்றோம். நான் 10 வயசில இருந்தே ரேஸ் வண்டி ஓட்ட கத்துக்கிட்டேன். என்னோட முழு  நேரதொழில் கரிக்கடை தான். பாரம்பரியமா என் ரத்ததிலே இந்த ஆர்வம் இருந்ததால, நானும் ரேஸ் வண்டி ஓட்ட ஆரம்பிச்சுட்டேன். இப்போ என் பையன் 10வது தான் படிக்கிறான் அவனுக்கும்  குதிரை வளக்கறதுலயும், ரேஸ் வண்டி ஓட்டறதுலயும் ஆர்வம்.

சாதாரண குதிரையை எப்படி ரேஸ் குதிரையா மாத்துவீங்க?

வாரத்தில மூணு நாள் குளிபாட்டனும். சுடுதண்ணியோட சேத்து சத்து டானிக் குடுக்கனும். குதிரை நல்ல தெம்பா இருக்கனும்கிறதால முட்டை, பாதாம் , பிஸ்தா, முந்தரி பருப்பு குடுக்கனும்.  தினமும் ரேஸ்க்கு ஓட்டி பழக்கனும். குதிரைக்கு சரியா கண்ணுல கடிவாளம் போட்டு ரெண்டு பக்கமும் மறச்சு, கண்ணு நேரா பாத்து ஓட கத்துக்கொடுக்கணும்.  10 ரேஸ்ல செயிச்சா குதிரை 80 ஆயிரம் ரூபா வரை போகும்.

ஒரு ரேஸ்ல செயிச்சா எவ்வளவு கிடைக்கும்? எந்த மாவட்டத்தில அதிகமா ரேஸ் வைப்பாங்க?

காசுக்காக இந்த ரேஸ் வண்டி ஓட்டல,  ஒரு இடத்தில செயிச்சா அங்க எங்களுக்கு கிடைக்கிற பேரும் புகழும் தான் எங்களுக்கு சந்தோசம். குறைஞ்சது 20 ஆயிரம் ரூபால இருந்து 4 ஆயிரம் ரூபா வரை கிடைக்கும். புதுக்கோட்டை , வம்பன், அறந்தாங்கி, தஞ்சாவூர், ஈரோடு, பவானில தான் அதிகமா  ரேஸ் போட்டி வைப்பாங்க. சித்தரை மாசத்துல தான் போட்டிலாம் அதிகமா  வரும். மத்த மாசத்தலலாம் நாங்க குதிரைய எங்க புள்ளமாதி வளப்போம்.

 

Leave A Reply

Your email address will not be published.