ஜாலிக்கா களவாடி சிறை சென்ற 4 இளைஞர்கள் !

0
ntrichy

ஜாலிக்கா களவாடி சிறை சென்ற 4 இளைஞர்கள் !

 தனது காதலிகளுக்காக செலவு செய்ய பெட்ரோல் பங்கில் களவாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே சாந்தி பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு கடந்த 16ம் தேதி அதிகாலை 3 மணியளவில் கருப்பு நிறம் கொண்ட பல்சர், எப்.சி.செட் ஆகிய 2 பைக்குகளில் ஹெல்மெட் அணிந்து வந்த 4 பேர், அங்கு பணியில் இருந்த மணிகண்டனிடம் ரூ.500 கொடுத்து 200 ரூபாய்க்கு பெட்ரோல் அடித்துள்ளனர்.

மணிகண்டன் சில்லறை எடுப்பதற்காக கல்லா இருக்கும் இடத்திற்கு செல்லும் போது  சுடவே சென்று  கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கல்லாவில் இருந்த ரூ. ரூ.3,05,500 பணத்தினை எடுத்துக்கொண்டு இரண்டு வண்டிகளில் மின்னல் வேகத்தில் மறைந்தனர். இது குறித்து மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்து விசாரித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 26ம் தேதி ஜீயபுரம் அருகே போலீசார் வாகன ரோந்து செல்லும் போது சந்தேகப்படும்படியாக நான்கு பேர் வண்டியை வைத்துக்கொண்டு நின்றுள்ளனர்.

 

போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கையில் 90 ஆயிரம் பணம் இருந்தது. விசாரணையின் போது அவர்கள் உய்யக்கொண்டான் திருமலையைச் சேர்ந்த நவீன் (எ) குமரவேல் (23). இவர் காட்டூர் பகுதியில் உள்ள  உருமுதன லெட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் படித்து  வருகிறார், சின்னமிளகுப்பாறையைச் சேர்ந்த நவீன்குமார் (23), குமார் (எ) குமாரவேல்(23) இருவரும் DEEE படித்தவர்கள், உறையூர் அஷ்ரப் அலி(20)  பாண்டமங்கலம் என்று தெரியவந்துள்ளது.

இவர்களின் நடவடிக்கை சந்தேகம்படும் படி இருந்தால் இவர்களுக்கு புகைப்படங்களை எல்லா காவல்நிலையத்திற்கு அனுப்பி தீவிர விசாரணைக்கு பிறகு இவர்கள் தான் பெட்ரோல்; பங்கில் பணம் களவாடியவர்கள் என்றும் களவாடுவதற்கு உபயோகித்த வண்டிகளும் திருடப்பட்டவையே என்றும் தனது காதலிகளுக்கு விதவிதமான ஆடைகள் வாங்க ரூ.32 ஆயிரமும், மது அருந்த ரூ.30 ஆயிரமும், பெமினா ஷாபிங் மாலில் உள்ள வெளிநாட்டு கேம் விளையாடி ரூ.50,000, என செலவு செய்தது போக மீதி 90 ஆயிரத்தை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர். திருச்சி சிறையில் அடைத்தனர்.  உழைத்து சம்பாதிக்க வேண்டிய இன்றைய இளைஞர்கள் தன்னுடைய சிற்றின்ப ஆசைக்காக எதிர்காலத்தையே கேள்விகுறியாக்கியிருக்கிறது.

 

 

Leave A Reply

Your email address will not be published.