போலீஸை ஓட ஓட அடித்து துவைத்த கைதி !து என்னா நடக்குது திருச்சி சிறையில்……………

0
ntrichy

போலீஸை ஓட ஓட அடித்து துவைத்த கைதி !து என்னா நடக்குது திருச்சி சிறையில்……………

 

தமிழகத்தில் உள்ள சிறைகளில் தொடர்ந்து பல அத்துமீறல்கள் நடைபெற்று வருவதாகவும், உள்ளிருக்கும் காவலா்கள் சிறை கைதிகளை தொடர்ந்து துனபப்டுத்துவதாகவும் பல சர்ச்சைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. அதற்கு நேர்மாறாக திருச்சி மத்திய சிறைக்குள் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

சிறைகளுக்குள் கைதிகள் செல்போன், போதை வஸ்துகள், கத்தி, பிளேடு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சில கைதிகள் காவலா்களின் உதவியுடன் அந்த பொருட்களை பயன்படுத்தி வருவது உள்ளிட்ட பல நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. வழக்கமாக காவலா்கள் அடங்கிய குழு சிறை கைதிகளை சோதனை செய்வது வழக்கம்.

அதேபோன்று திருச்சி சிறையில் உள்ள நான்கு பேர் கொண்ட குழு அவ்வப்போது ஆய்வுகளை நடத்துவதும், கட்டபஞ்சாயத்து செய்வதாகவும் கூறப்படுகிறது. அந்த குழுவில் தற்போது தர்மராஜ், புண்ணியமூர்த்தி, குமரவேல், மகாராஜன் உள்ளிட்ட 4 காவலா்கள் உள்ளனா். அவா்கள் வழக்கம் போல் கைதிகளிடம் கடந்த 16ம் தேதி சோதனை செய்துள்ளனா். தற்போது அங்கு விசாரணை கைதியாக உள்ள தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி செல்வகுமாரிடம்(27) விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து பல கேள்விகள் எழுப்பியதோடு, சோதனை செய்து, தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி எரிச்சலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் 4 போலீசாரை அடித்துள்ளார். அதில் தன்னை எரிச்சலாக்கிய தா்மராஜ், புண்ணியமூர்த்தி இருவரையும் ஓட ஓட விரட்டி அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காவலா்கள் கடந்த 16ம் தேதி இரவு செல்வகுமாரை கட்டிப்போட்டு இரவு முழுவதும் வைத்து அடித்து மீண்டும் அவருடைய அறையில் அடைத்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றனா்.

இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி சிறையில் மாலை நேரத்தில் சிறை வளாகத்திலுள்ள பொதுக் குழாயின் அருகே சுபாஷ் சந்திர கபூர் தனது  சட்டையை துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது, குழாயில் இருந்து தண்ணீர் அதிக அளவு வீணாகிக் கொண்டிருப்பதை பார்த்த யுவராஜ், சுபாஷ் சந்திர கபூரிடம் “ஏன் இப்படி நீரை வீணாக்குகிறாய்” எனக் கோபப்பட்டுள்ளார். அதற்கு, “பொது குழாய்தானே? நீங்கள் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?” என சுபாஷ் சந்திர கபூர் ஆங்கிலத்தில் பதில் பேசியுள்ளார்.  இதனால் இருவருக்கும் பிரச்சனை முற்றியிருக்கிறது. இதில்  ஆத்திரமடைந்த யுவராஜ், திடீரென சுபாஷ் சந்திர கபூரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். வலி தாங்க முடியாமல் சுபாஷ் சந்திர கபூர் கூச்சலிட்டதால், அருகிலிருந்த காவலர்கள் ஓடிவந்து யுவராஜைப் பிடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

யுவராஜ் தன்னை தாக்கியது குறித்து சிறை நிர்வாகத்திடம் சுபாஷ் சந்திர கபூர் புகார் செய்தார். அதன்பேரில் யுவராஜ், சுபாஷ் சந்திர கபூர் ஆகிய இரு வரையும் அழைத்து சிறை கண் காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

திருச்சி சிறைக்கு புதிய டிஐஜியாக பொறுப்பேற்றுள்ள சண்முகசுந்தரம் சிறையில் இந்த அடிக்கடி இது போன்ற சம்பவங்களை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.