திருநங்கை திருமண விவகாரம் காவல் நிலையத்தில் பஞ்சாயத்து

0
ntrichy

திருநங்கை திருமண விவகாரம் காவல் நிலையத்தில் பஞ்சாயத்து

 

திருச்சி, காண்டோன்மட் காவல் நிலையத்தில் திருநங்கை திருமண விவகாரத்தை பஞ்சாயத்து செய்து காவல்த்துறை அதிகாரி பிரித்துவைத்தார்.

திருச்சியை சேர்ந்த காளிமுத்து(17) மற்றும்  திருநங்கை கார்த்திகா(17) ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களுக்க முன்பு காதலித்து திருமணம் செய்தகொண்டனர். தற்போது, இருவரும் கருமண்டபத்தில் உள்ள திருநாங்கைகள் வாழக்கூடிய பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், காளிமுத்துவின் பெற்றோர்கள் , இவனுக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை என்றும், கார்த்திகாவின் பெற்றோர்கள், காளிமுத்து தனது மகளை பிச்சை எடுக்கவைத்து அந்த பணத்தை வாங்கிக்கொள்வதாகவும் திருச்சி கண்டோன்மட் காவல்  நிலையில் புகார் அளித்தனர். இதைத்தொடரந்து, காளிமுத்து மற்றும் திருநங்கை கார்த்திகா ஆகிய இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இந்த புகாருக்கு எப்.ஐ.ஆர் எதுவும் போடாமல்  சப் இன்ஸ்பெக்டர் முகமது இப்ராகிம் தலைமையில் காவல் நிலையத்தில் விசாரணை  நடைபெற்றது. அதில், பெற்றோர்களின் பேச்சைக்கேட்டு நடக்குமாறு இருவரும் பிரித்துவைக்கப்பட்டனர். அப்போது,  காவல் நிலையத்தின் வெளியே திருநங்கைகள் சமூகத்தினர் பெரும் திரளாக நின்றனர். மேலும், கார்த்திகாவுக்கு அறுவைச்சிகிச்சைக்காக திருநங்கைகள் சமூகத்தில் இருந்து வழங்கப்பட்ட பணம் ரூ.1லட்சத்தை மாதம் ரூ.1ஆயிரம் என அச்சமூகத்திற்கு திருப்பிக்கொடுக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசியமைப்புச்சட்டத்தில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கென திருமணச்சட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.