6 முதல் 60 வது வரை இலவச ஜிம்

0
ntrichy

திருச்சி மாநகராட்சியின் மூலம் 1.26 கோடியில் பூங்கா

திருச்சி மாநகராட்சி பகுதியில் 1.26 கோடியில் மக்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள் குறைவு. இதனால், மாநகராட்சி பழைய பூங்காக்களை பராமரிக்கவும், புதிய பூங்காக்களை அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன், மக்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வசதியாக நடைப்பயிற்சி பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

திருச்சி அண்ணாநகர் இணைப்புச்சாலையில் எம்.ஜி.ஆர் சிலை பகுதி முதல் உய்யக்கொண்டான் பாலம் வரை நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே மேர்க்கொள்ளப்பட்ட பணியுடன் பாலத்துடன் இணைக்கும் வகையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபயிற்சி பாதை விரிவுப்படுத்தும் பணி துவக்கப்பட்டது.

எனினும், இப்பகுதியில் மக்கள் உடற்பயிற்சி மேற்க்கொள்ள வசதியாக திறந்த வெளி ஜிம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கூடுதலாக ரூ.34 லட்சம் ஒதுக்கப்பட்டு அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் உயரமான தடுப்புச் சுவர் அமைத்து ஜிம் அமைப்பதர்க்காண பணிகள் நடந்த்8 வருகிறது. இதே போல, தில்லைநகர் வட கிழக்கு விஸ்தரிப்பு பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் பூங்காவுடன் கூடிய திறந்தவெளி ஜிம் அமைக்கும் பணி துவக்கப்பட உள்ளது.

மேலும் கே.கே.நகரில் ராஜாராம் சாலையில் சின்னசாமி பூங்கா, மகாத்மா காந்தி பூங்கா ஆகிய இடங்களில் பூங்காவுடன் கூடிய ஜிம் தலா ரூ.10 லட்சத்திலும் காஜாமலை காலனி வீட்டு வசதி வாரிய பகுதியில் ரூ.20 லட்சத்தில் பூங்காவுடன் கூடிய ஜிம், அரியமங்கலத்தில் தஞ்சை சாலையில் பர்மா காலனியில் ரூ.31.90 லட்சத்தில் பூங்காவுடன் கூடிய ஜிம் ஆகியவையும் அமைக்கும் பணி விரைவில் துவக்கப்பட உள்ளது. இந்த வகையில் 6 இடங்களில் ரூ.1.26 கோடியில் அமைக்கப்பட உள்ளது.

ஏற்கனவே திருச்சி கே.எம்.சி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையை ஒட்டியுள்ள பூங்காவை மேம்படுத்தி ஜிம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் ஆர்வமுடன் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மேலும் சில இடங்களில் ஜிம் அமைக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.