கேமரா போச்சே

0
ntrichy

திருச்சி கோவில் தேரோட்டதில் கேமரா பறிமுதல்

திருவனைக்கோவில் தேரோட்டதை அனுமதியில்லாமல் படம் பிடிக்க பயன்படுத்திய டிரோன் கேமரா பறிமுதல்,

திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் கோவில் பங்குனி விழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதை பல பத்திரிக்கையாளர்கள் பலர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். தேரோட்டதை டிரோன் கேமரா ஒன்று வீடியோ எடுத்தது. அதனை பார்த்த போலீஸ் துணை கமிஷ்னர் ஹெலிகேம் பயன்படுத்த போலீசாரிடம் அனுமதி பெற்றுள்ளனரா என்று கேட்டார். உடனே டெலிகேம் ஆப்ரேட்டரை விசாரித்ததில் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக கூறினார். சரியான அனுமதி இல்லாமல் டெலிகேம் பயன்படுத்தியதால் அவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.