உள்ளே போனாலே லஞ்சம் சிக்கிய மருத்துவர்.

0
ntrichy

திருச்சி அரசு மருத்துவமனையில் லஞ்சம் சிக்கிய மருத்துவர்.

ஏற்கனவே மக்களிடையே அரசு மருத்துவமனை பற்றிய ஒரு தவறான எண்ணம் இருந்து வருகிறது. அங்கே சரியாக மருத்துவம் வழங்குவதில்லை என்றும், நோயாளிகள் மீது அக்கறை இல்லை என்றும், சுகாதாரம் இல்லை கூறுகின்றனர். இதனாலே பல ஏழை மக்களும் தனியார் மருத்துவமனை நோக்கி ஓடி கொண்டிருக்கின்றனர். .

திருச்சி திருவரங்கம் மருத்துவமனையில் இதே போன்ற அடிப்படை பிரச்சனை நிலவி வருவதாக கூறுகின்றனர். கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் வசதி இருந்தும், டாக்டர் இல்லை ,இரவு நேரங்களில் அவசர நோயாளிகள் வரும் பொழுது செவிலியர்கள் முதலுதவி செய்து புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அலைக்கழிக்கிறார்கள், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு குடிதண்ணீர் மற்றும் சுடு தண்ணீர் இல்லாததால் மக்கள் கடும் அவதியுறுகின்றனர். போதிய டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாமல் நோயாளிகள் பெரும் அவதியுறுகின்றனர். என்றும் கூறுகின்றனர். இதையும் விட ஒரு சில செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மருத்துவம் பார்க்க வருபவர்களிடம் 100 கொடு 1000 கொடுனு பணம் பறிக்கிறார்கள்..என்று புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக இன்று திருவரங்கம்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இது தொடர்பாக திருவரங்கம் மருத்துவமனை தலைவரிடம் கோரிக்கைகளை வைத்த பொது அவர் தனுக்கு எதும் தெரியாது என்றும் இதனைக்குறித்து உடனே நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது என்று ஒரு பொறுப்பற்ற பதிலை கூறினார்.

இதுப்போன்ற பொறுப்பற்ற அதிகாரிகள் இருக்கும் வரை அவர் கீழே உள்ளவர்கள் தவறு செய்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.