பிராத்தனையை விட சேவையே வலிமையானது அன்னை தெரசாவின் வாழ்வியலை கண்முன்னே நிறுத்தும் ஓவியக்கண்காட்சி

0
ntrichy

 

பிராத்தனையை விட சேவையே வலிமையானது அன்னை தெரசாவின் வாழ்வியலை கண்முன்னே நிறுத்தும் ஓவியக்கண்காட்சி

 

பிராத்தனையை விட சேவையே வலிமையானது என உணர்த்திய அன்னை தெரசாவின் வாழ்வியலை கண்முன்னே நிறுத்தும் ஓவியக்கண்காட்சி திருச்சி தில்லைநகர் ராம் நகரில் உள்ள லீடர்ஸ் ஆர்ட் கேலரியின் மூலம் வருடா வருடம் ஓவியக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த வருடமும் சேவையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் அன்னை தெரசாவின் தூய ஆத்ம சேவையை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையிலும் பத்து நாள் ஓவியகண்காட்சி கடந்த 10ம் தேதி தொடங்கியது.

அன்னை தெரசாவின் வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சம்பவத்தையும் கேட்கும் போதும் சேவைக்கு அன்னை தெரசா கொடுத்த முக்கியத்துவம் புலப்படுகிறது. குறிப்பாக பிரார்த்தனையை விட சேவையே வலிமையானது என்ற சம்பவத்தை உணர்த்தும் ஓவியம் பார்வையாளர்களின் கண்களைவிட்டு அகலவில்லை. மேலும், இரண்டாவது ஜான்பால் போப் உடன் அன்னைதெரசா உரையாடக்கூடிய ஓவியம், கிருஸ்தவர்கள் இந்துகளை மதம் மாற்றுகின்றனர் என்று கூறும் போது நான் இந்தியன் என்று அன்னை தெரசா கூறுகிறார். அப்போது, வெள்ளை புற இடையே பறக்கிறது. இதை கண்ட உடன் அந்த உணர்வை நம்பாலும் பெற முடிகிறது. அன்னை தெரசாவின் முகத்தில் சுருக்கம் இல்லாமல் அமைந்திருக்கும் ஓவியமானது, தத்ரூபமான பழைய அன்னை தெரசாவின் புகைப்படம் போல் உள்ளது.

இவ்வாறாக பல்வேறு ஓவியங்கள் நுணுக்கத்தையும் தாண்டி, நல்ல கருத்துக்களை பிரதிபலிக்கும் வண்ணம் உள்ளன. மேலும், இக்கண்காட்சியை சென்னை அரசு நுண்கலை கல்லூரி முன்னாள் முதல்வர் ஓவியர் சந்துரு துவங்கி வைத்தார். தூய வளனார் தன்னாட்சி கல்லூரி ரெக்டர் அருட்தந்தை லியோனார்டு, ரோட்டரி மாவட்ட ஆளுனர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட ஆளுனர் கோபால் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். அருட்தந்தை தம்புராஜ், தூய வளனார் கல்லூரி துணை முதல்வர் அருட்தந்தை அருள்தாஸ், தேசிய கல்லூரி உயிரியல் துறை தலைவர் கோகுலா, ஆங்கிலத்துறை பேராசிரியர் யூஜீன் டிவால் , லீடர்ஸ் சாய்ஸ் ஆர்ட் கேலரி இயக்குனர் ஹெர்மன் கார்டஸ் உள்ளிட்டோர் அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு ஓவியங்களை அப்ஸ்ட்ராக்ட், பாப் , இம்ப்ரசன்ஸ் முறையில் அக்ரலிக், ஆயில் பெயிண்டிங்கில் வரைந்து 50 க்கும் மேற்பட்ட ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.

தினமும் மாலை 5முதல் 8மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், ஓவியம் பயிலும் மற்றும் கல்லூரி மாணவர்கள், குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் நாள்தோறும் பார்வையிடுகின்றனர். அனுமதி இலவசமாக வழங்கப்படுகிறது. வரும் 20ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இக்கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரும், லீடர்ஸ் ஆர்ட் கேலரியின் இயக்குநருமான ஹெர்மோன் கார்ட்ஸ் கூறியதாவது, நான் செயின்ட்ஜோசப் கல்லூரியில் பிரென்ச் துறையின் பேராசிரியராக பணியாற்றிவருகிறேன். மாலைநேரங்களில் லீடர்ஸ் ஆர்ட் கேலரியை பார்த்துகொண்டும் இருக்கிறேன். மறைந்து வரும் ஓவியக்கலையினை ஆவணப்படுத்தவேண்டும் என்பதே எனது நோக்கம். அந்த வகையிலையே ஆர்ட் கேலரி ஆரம்பித்து வருடாவரும் கண்காட்சியினை நடத்திவருகிறேன். இந்த வருடம் அன்னை தெராசாவின் சேவையை போற்றும் வகையில் ஓவியங்களை காட்சிப்படுத்தியுள்ளோம். சேவையைக் கருவாகக்கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டிருப்பதால் அன்னைதெரசாவின் வாழ்வியலை கண்முன்னே இக்கண்காட்சி கொண்டுவரும். இந்த கண்காட்சியில் ஓவியங்கள் மட்டுமின்றி அன்னைதெரசாவின் ஜெபமாலை,ரூ.5 நாணயம், அவரின் உடையில் சிறு துண்டு, தலைமூடி, அன்னைதெரசா கைப்பட எழுதிய கடிதம், சிலுவை, டாலர் என அனைத்தும் இடம்பெற்றுள்ளது. இவைகளை பெரும்பாலம் எந்த கண்காட்சியிலும் பார்க்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.  கண்காட்சி முடிந்த உடன் இதுவரையில் நடைபெற்ற கண்காட்சிகளில் இருந்து சிறந்த ஓவியங்களை எடுத்து காட்சிக்கு வைத்துவிடுவோம். அடுத்த கண்காட்சி வரும் வரையில் அவை அப்படியே இருக்கும். இது மட்டுமின்றி ஓவியம் குறித்தான பயிற்சி வகுப்புகளும் எடுப்போம்.  இங்கு நடைபெறும் கண்காட்சிக்கு எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. என்றார்.

புனிதர் பட்டம் என்பது 3 அற்புதங்களை செய்தால் மட்டுமே வழங்கப்படும். அந்த வகையில், அமைதிக்காக நோபல் பரிசு வென்ற அன்னைதெரசா, சேவையையே கடமையாககொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அவர் மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்களின் மனங்களில் இருந்து மறையவில்லை என்தற்கு இக்கண்காட்சியே ஒரு சான்று.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.