0
ntrichy

ஸ்மார்ட் சிட்டியாகும் திருச்சி

 2018- 2019ம் ஆண்டுக்கான திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை ஆணையர் ரவிசந்திரன் தாக்குதல் செய்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டம் ரூ.1,156 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் 2018 -19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஆணையர் ரவிசந்திரன் தாக்குதல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்குதல் மாநகராட்சி வெப் செஇட்டில் வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வரவு ரூ.494 கோடியே 62 லட்சமாகவும், செலவு ரூ.493 கோடியே 79 லட்சமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.83 லட்சம் உபரியாகும். கடந்த 2017-18ம் ஆண்டில் வரவு ரூ.344.35 கோடி. செலவு ரூ.343.75 கோடி. உபரிரூ 60 லட்சம்.

இந்த பட்ஜெட்டின்கீழ் வரும் திட்ட அறிக்கை:

பாதாள சாக்கடை அமைப்பதற்கு ரூ.312 கோடியே 14 லட்சம்

மத்தியசிறை அருகே 99.89 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும், இந்த அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.2.64 கோடி செலவில் 4 புதிய பூங்காக்கள் சீரமைக்கப்பட உள்ளது.  ரூ.2.53 கோடி செலவில் புதிய பூங்காக்களும் திறக்கப்பட உள்ளன்.

இயந்திரமில்லா வாகன போக்குவரத்து ஏற்படுத்துதல் பஸ்கள் செல்லும் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் தனியாக நடைபாதை தட்ம் மற்றும் சைக்கிள் தடம் அமைக்க பாரதிதாசன் சாலை, ராஜாராம் சாலை, வயர்லெஸ்ரோடு, ராக்கின்ஸ் ரோரு ஆகிய இடங்களுக்கு ரூ.17 கோடியே 76 லட்சம் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.