எங்க ஊரு எம்.எல்.ஏ-கே.என்.நேரு

0
ntrichy

                                                                                                                                                                          எங்க ஊரு எம்.எல்.ஏ-கே.என்.நேரு

நீங்க நல்ல இருக்கோனும் இந்த நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற என்ற பாடல் வரிகள் யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ தெரியவில்லை முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும்,திருச்சி மேற்க்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.என் நேருவிற்க்கு பொருந்தும்.பெயர் சொல்லும் அளவிற்க்கு திருச்சியில் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.கே.என் நேரு தி.மு.காவிலும் மலைக்கோட்டை மாநகரிலும் அசைக்க முடியாத சக்தி. கலைஞரின் செல்லப்பில்லை இவர்,ஆரம்பம் முதல் இன்று வரை ஸ்டாலினுக்கும் நம்பிக்கைக்குரியவராக வலம் வருகிறார்.

கட்சியில் பல கட்ட தலைவர்களை பார்த்து பழகி பல சோதனைகளையும் ,சாதனைகளையும் கடந்து வந்தவர்.சில வருடங்களுக்கு முன்பு வரை மலைக்கோட்டையை தி.மு.காவின் கோட்டையாக வைத்திருந்தவர்.தற்ப்போது மீண்டும் அதே நிலையை கொண்டு வர வேண்டும் என்று 66வயதிலும் 25 வயது இளைஞரைப்போல்,தனது தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளிலும் வலம் வருகிறார்.

சரி திருச்சி மேற்க்கு தொகுதி நிலவரத்திற்க்கு வருவோம்

காலை ஐந்து மணிக்கு எழுந்து உடற்பயிற்ச்சியை முடித்துவிட்டு கடவுளாக தான் நினைக்கும் தாய் தந்தையை வணங்கிவிட்டு ,அதன் பின் தன் தம்பியை வணங்கி விட்டு காலை 8 மணிக்கு தில்லை நகர் ஐந்தாவது கிராஸில் இருக்கும் கட்சி அலுவலகத்திற்க்கு வந்து விடுகிறார்.வந்ததும் முதலில் கட்சியினரை கூட பார்க்காமல் தன் தொகுதி மக்களை வரச் சொல்லி குறைகளை கேட்கிறார். அதில் எந்த பிரச்சனையை உடனே சரி செய்ய முடியுமோ அதனை அப்போதே தீர்க்க போன் பொட்டு சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் பேசுகிறார்.அதனை அன்றே செய்து கொடுக்க சொல்லவதோடு,அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டதா என சம்மந்த பட்டவர்களிடம் போன் போட்டு கேட்பார்.நேருவிடம் இருந்து போன் போனால் அதிகாரிகள் அவர் அமைச்சராக இருக்கும் போது எப்படி நடந்து கொண்டார்களோ இன்றும் அதிலிருந்து ஒரு இம்மி கூட மாறவில்லை உடனே செய்து கொடுக்கிரார்கள்,மீண்டும் மாலை நேரங்களில் தன்னுடைய வாகனத்தை எடுத்து கொண்டு தன் தொகுதியில் வலம் வருகிறார்.

 

” இன்னைக்கும் எங்களுக்கு அமைச்சர்தான்!”

தொகுதியில்  தண்ணிர் பஞ்சமோ, சாலை வசதி குறைவோ, மின் விளக்கு வசதியோ-எதற்கும் குறைவில்லை. தன்னுடைய சட்ட மன்ற நிதியை தன்னுடைய தொகுதிகுட்பட்ட  33 வார்டுகளில்  இருக்கும் கட்சியினருக்கு பிரித்து கொடுத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வழி வகை செய்துள்ளார்.  தொகுதி நிதியில் இவர் ஒரு ரூபாய் கூட  கமிஷன் கேட்பதில்லை- தேவைப்பட்டால் இவர் கை காசை தான் கொடுத்து வேலையை  உடனடியாக முடிக்க சொல்கிறார். கே.என்.நேரு ரெட்டியார் சமுகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் நல்லது கேட்டதுகளில்முதல் ஆளாக கலந்துகொள்கிறார் அதுமட்டுமில்லாமல் தனது தொகுதியில் முஸ்லீம் மக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள்  வீட்டு நிகழ்சிகளிலும் கலந்துக்கொள்வதோடு, மற்ற சமுதாயதினரையும் அரவணைத்து செல்கிறார். அடுத்து திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் சிலரிடம் பேசினோம் அவர்கள் நம்மிடம், பெரிதாக எந்த குறையும் அவர் வைத்ததில்லை. அவர் என்ன ஆளும் கட்சி அமைச்சரா அவரை குறை சொல்ல. இன்று வேண்டுமானாலும் காலை 8 மணிக்கு போய் அவர் ஆபிஸில் பாருங்கள், ஆளுங்கட்சியின் அமைச்சர் வீட்டில் கூட அவ்வளவு கூட்டம் இருக்காது. ஆனால், நேருவின்  அலுவலகத்தில் புகார் மனுக்களோடு, கட்சியினர் மட்டுமின்றிபொது மக்களும் காத்திருப்பர்கள்

அதே போல அவர் தொகுதியை மட்டும் இப்போது நினைப்பதில்லை. ஒட்டு மொத்த திருச்சியைதான் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. கலைஞர் ஆட்சி காலத்தில் இவர் முயற்சியில் திருச்சியை மேம்படுத்த  என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தாரோ அதனை செயல்படுத்த என்ன வழி என்று தான் யோசித்து கொண்டு இருக்கிறார். சில குற்றச்சாட்டுகள் சிலர் அவர் மீது சில வருடங்களுஇக்கு முன்பு எழுந்தது. அதற்குக் காரணம் முன்னால் அமைச்சர் முசிறி  செல்வராஜ் தான். அவருடைய ஆதரவாளர்களை வைத்து நேருவுக்கு எதிரான கருத்துகளை  பரப்பிவிடுவார். அவர் தற்போது அ.தி.மு.கா.விற்கு போய்விட்டார். இவருடைய லால்குடி மார்டன் ரைஸ்மில்,பல ஊர்களில் இரவினர் பெயரில் ஓட்டல்களலென்று சேர்த்தது தி.மு.க. ஆட்சியில் சேர்த்த பணம் என்று தொகுதியில் பேசப்படுகிறது. மகேஷ் பொய்யாமொழி இவருக்கு எதிராக செயல்படுவதாக செய்திகள் உள்ளன. அண்ணனுக்கு பதவி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இன்னைக்கும் எங்களுக்கு அவர்தான் அமைச்சர்! என்றனர்.

மகிழ்சியோடு திரும்பி வந்தோம்!

Leave A Reply

Your email address will not be published.