திருச்சி அரசு மருத்துவமனையில் கணினி கோளாறு காரணமாக நோயளிகள் கடும் அவதி

0
ntrichy

திருச்சி அரசு மருத்துவமனையில் கணினி கோளாறு காரணமாக நோயளிகள் கடும் அவதி

திருச்சி அரசு மருத்துவ மனைக்கு திருச்சியை சேர்ந்த நோயாளிகள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் உள்ள  பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் தினமும் வருகை தருகின்றனர். அவர்களின் நோய்களுக்கு ஏற்ப புற நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாக தங்கியும் சிகிச்சை பெறுகின்றனர். அரசு மருத்துவமனை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் நோயாளியின் பெயர், முகவரி மற்றும் அவர்களின் நோய் விவரங்கள் முழுவதும் கணினியில் பதிவு செய்யப்பட்டு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள விபத்து மற்றும் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு கட்டிடம் உள்பட மருத்துவமனை முழுவதும் அனுமதி சீட்டு வழங்குமிடத்தில் உள்ள நோயாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் கணினிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவைகள் இயங்கவில்லை.

இதன்காரணமாக நோயாளிகளின் அனுமதி சீட்டு கணினியில் பதிவு செய்ய முடியவில்லை. தாளில் எழுதி கொடுப்பதால் தாமதம் ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் நேற்று காலை நீண்ட வரிசையில் நின்று அனுமதி சீட்டு வாங்கி சென்றதால் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Leave A Reply

Your email address will not be published.