கிராம உதவியாளர் பணியிடத்திற்க்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்களாம்- ஆட்சியர் ராசாமனி

0
ntrichy

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்க்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்களாம் என ஆட்சியர் ராசாமனி தெரிவித்துள்ளார்.

தகுதி-5-ஆம் வகுப்பு எழுத படிக்க தெரிய வேண்டும்

வயது வரம்பு

பொது பிரிவினர்-21முதல்30

பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட,சீர் மரபினர்-21முதல்35

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்-21முதல்35

மற்றுத்திறனாளிகள்-21முதல்40

முன்னாள் ராணுவ வீரர்கள்-21முதல்48(பொது பிரிவு)21முதல்53(இதர பிரிவு)

ஆதரவற்ற விதவைகள்-21முதல்35

விண்ணப்பதாரர்கள் பணி வழங்கும் வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.முதல் கணவரோ மனவியோ உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தவராக இருக்க கூடது.உயிரோடு இருப்பவரின் கணவனையோ மனைவியையோ மணந்தவராக இருக்க கூடது.

விண்ணப்பதாரர் சாதிச் சான்று,கல்வித்தகுதி சான்று,குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்னப்பத்தினை துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியரிடம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 15.03.2018 ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

 

Leave A Reply

Your email address will not be published.