இளைஞர்களுக்கான தேசிய பயிற்சி பட்டறை

0
ntrichy

இளைஞர்களுக்கான தேசிய பயிற்சி பட்டறை

சென்னை சமூகப்பணி பள்ளியுடன் இணைந்து திருச்சி தேசிய கல்லூரின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தேசிய அளவிலான இளைஞர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை தேசிய கல்லூரியில் நடைப்பெற்றது.

உடற்கல்வித்துறை முனைவர் பிரசன்னா பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்கத்தில், வன காப்பாளராக பணிபுரியும் பாலமுருகன் இளைஞர்கள் தங்கள் ஆக்கப்பூர்வ பணிகளில் வெளிப்படுத்துவது எப்படி என்று சிறப்புரையாற்றினார். முனைவர் வீரேந்தர், மனநல ஆலோசகர் ‘சுய நம்பிக்கை’ குறித்தும், தொழில் முனைவோராக ஆவது எப்படி’ என்று தொழிலதிபர் பிருந்தா ராகவன் எடுத்துரைத்தனர். பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த சுமார் 500 மாணவ, மாணவிகள் இப்பயிற்சி பட்டறையில் கலந்துக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.