இறகுகள் தொண்டு நிறுவனம் சார்பாக குழந்தைகளுக்கு மருத்துவ  உதவி

0
ntrichy

இறகுகள் தொண்டு நிறுவனம் சார்பாக குழந்தைகளுக்கு மருத்துவ  உதவி

இறகுகள் தொண்டு நிறுவனம் சார்பாக  ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளித்து மருந்துகளும் வழங்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக TELC  நடுநிலைப்பள்ளியில் ஆதரவற்ற குழந்தைகள், TELC தரங்கை இல்லத்தில் உள்ள குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து மதிய உணவு வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியினை இறகுகள் அமைப்பின் நிறுவனர் ராபின், இறகுகள் இரத்த சேவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சபரிசங்கர், தஞ்சாவூர் மரியமெர்சி, கோவை விவேகானந்தன், சென்னை ஜோயல் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி இறகுகள் ஒருங்கிணைப்பாளர் எழிலரசன், சிந்து, தினேஷ், மணிகண்டன் மற்றும் 80-க்கும் மேற்பட்ட இறகுகள் தோழர்களைக் கொண்டு நடத்தப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.