போலிஸ் மீது நடவடிக்கை எடுக்கபடுமா?  மக்கள் அதிகார அமைப்பினர் போராட்டம்

0
ntrichy

போலிஸ் மீது நடவடிக்கை எடுக்கபடுமா?  மக்கள் அதிகார அமைப்பினர் போராட்டம்

திருச்சி கலெக்டர் ஆபீஸின் முன்பு மக்கள் அதிகார அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் நடத்திய எஸ்.ஐ கோபாலை பணி நீக்கம் செய்யவேண்டும், நள்ளிரவில் தாக்குதலில் ஈடுப்பட்ட உறையூர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் மீது போடபட்ட வழக்குகள் திரும்ப பெற வேண்டும், நீதிபதி தலைமையில் விசாரணை  நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சனை குறித்து மேலத்தெரு  பகுதியை சேர்ந்த கீதா கூறியதாவது, “உய்யக்கொண்டான் திருமலை செக்போஸ்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோதுச் அப்பகுதியை சேர்ந்த மேலத்தெரு இளைஞர்கள் வாகனம் ஓட்டி வந்தபோது அவர்களை நிறுத்தி விசாரித்த போலீசார் சரியான ஆவணங்கள் இருந்தும் அபராத தொகை செலுத்த கோரியதால் போலீசாரிடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த போலீசார் ஆபாசமாக திட்டியும் அடித்தும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியும் வழிப்பறி செய்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்ட எஸ்.ஐ கோபால் உள்ளிட்ட போலீசாரிடம் மேலத்தெரு பொதுமக்கள் நியாயம் கேட்டதற்கு போலீசார் அவர்களையும் கடுமையாக தாக்கி விரட்டியுள்ளனர்.

அதன்பின் இரவில் வேன்களில் வந்த காவல்துறை எஸ்.ஐ கோபால் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தவர்களையும், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆண்களையும், அத்துமீறி வீடுபுகுந்து இழுத்துவந்து, வீதியில் வைத்து அடித்தனர், தடுத்து நிறுத்திய பெண்களையும் முதியவர்களையும் தாக்கி 10 பேரை வேனில் அடைத்து, உறையூர் காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமராவை நிறுத்திவிட்டு, இளைஞர்களை நிர்வாணப்படுத்தி லத்தியாலும் பூட்ஸ் காலாலும் மிதித்து சித்ரவதை செய்துள்ளனர். அதில் தேவேந்திரன் என்பவரின் இடதுகால் முட்டி உடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பலருக்கு கடுமையான காயமும் ஏற்பட்டது, இச்சம்பவத்திற்காக தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.அதற்காகத்தான் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுக்கவந்துள்ளோம்.“ என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.