திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சி துப்புரவு பணியாளர் மின்சாரம் தாக்கி பலி

0
ntrichy

திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சி துப்புரவு பணியாளர் மின்சாரம் தாக்கி பலி

திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சி பகுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தவர் ராஜா(45). இவருக்கு அரங்கூர் செல்லும் வழியில் குப்பைக் கிடங்கின் அருகிலேயே தங்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தான் தங்கி இருக்கும் வீட்டில் மின்சாரக்கசிவு ஏற்படுகிறது என்றும், அதனை சரிசெய்து தர வேண்டும் எனவும் மின்சார வாரிய அலுவலகத்தில் ராஜா கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், கடந்த 9-ம் தேதி இரவு, எதிர்பாராதவிதமாக வீட்டின் ஜன்னல் கம்பியை தொட்ட பொழுது அவரை மின்சாரம் தாக்கியது. அதனால்  ரஜினி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பற்றி அவரது உறவினரான சரசு என்பவரை கேட்ட பொழுது ஏற்கனவே மின்சாரக் கசிவு சம்பந்தமாக புகார் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இவர் இறந்த அன்று இரவு அந்த மின்சார கம்பி சரி செய்யப்பட்டது. இந்த வேலையை அன்றே செய்திருந்தால் வீணாக ஒரு உயிர் பலியாகி இருக்காதே என கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் இறந்த ரஜினி வீட்டின் அருகில் வெளியூரில் இருந்து வந்து செங்கல் சூளையில் வேலை செய்யும் நபர்கள் தங்கி இருக்கின்றனர். அவர்கள் காவல்துறை விசாரணையின் போது, நாங்கள் ரஜினி இறந்த அன்று இரவு மின்சார துறையினர் பழுதினை சரி செய்ததை பார்த்தாக கூறினர். இறந்த ரஜினி குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்ட வெளியூர் தொழிலாளர்களை இரவில் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டுவதாகவும், ரஜினியின் உறவினர் சரசு கூறினார். மேலும் மின்சாரம் தாக்கி பலியான ரஜினியின் மனைவி லட்சுமிக்கு வாரிசு அடிப்படையில் வேலை தருமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் சொன்னார். மின்சாரம் தாக்கி இறந்த ரஜினிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து தொட்டியம் பேரூராட்சி எலக்ட்ரீசியன் கலியபெருமாள் மற்றும் அவரது உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இறந்த ரஜினி கடந்த 18 வருடமாக பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக வேலைசெய்து வந்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.