திருச்சியில் அதிக வட்டி கேட்டு டார்ச்சர் செய்த பைனான்ஸ்சியர்கள் மீது அடுத்தடுத்து வழக்கு !

0
1

திருச்சியில் அதிக  வட்டி கேட்டு டார்ச்சர் செய்த பைனான்ஸ்சியர்கள் மீது அடுத்தடுத்து வழக்கு !

 

 

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த இடையாற்று மங்கலம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளமுருகு ராஜா (வயது 50), விவசாயி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஆனந்தி மேடு கிராமத்தில் வசிக்கும் பாஸ்கர் என்பவரிடம் தனது குடும்ப செலவிற்காக ரூ.1½ லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்கு இளமுருகு ராஜா இதுவரை ரூ.5 லட்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் மேலும் ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 960 கேட்டு இளமுருகு ராஜாவை பாஸ்கர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இளமுருகு ராஜா கொடுத்த புகாரின் பேரில் லால்குடி இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

2

இதே போன்று திருச்சி மாநகர் பகுதியில்…

 

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் பெஞ்சமின் ஞானபிரகாசம் (வயது 79). இவர் 2014-ம் ஆண்டு மே மாதம் பொன்மலை பட்டியில் உள்ள சாமுண்டீஸ்வரி பைனான்ஸ் உரிமையாளரான அருள் என்பவரிடம் வட்டிக்கு ரூ.75 ஆயிரம் வாங்கியுள்ளார்.

 

அதன் பின் ஒவ்வொரு மாதமும் அசல் மற்றும் வட்டியை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி செலுத்தியுள்ளார். முழுமையாக பணம் செலுத்திய பிறகு அவர் கொடுத்த ஆவணங்களை திருப்பி கேட்டுள்ளார்.

 

இந்நிலையில் அவர் கூடுதலாக வட்டி தர வேண்டும் என மிரட்டினாராம். இது குறித்து பெஞ்சமின் ஞானபிரகாசம் கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கூடுதலாக வட்டி கேட்டு மிரட்டிய அருள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

 

 

3

Leave A Reply

Your email address will not be published.