திருச்சியில் பக்ரீத்துக்கு 4 மணி நேரத்தில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை !

0
1

திருச்சியில் பக்ரீத்துக்கு 4 மணி நேரத்தில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை !

 

பக்ரீத் பண்டிகையையொட்டி மணப்பாறை ஆட்டுச்சந்தையில் 4 மணி நேரத்தில்ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

பக்ரீத் பண்டிகையையொட்டி மணப்பாறை ஆட்டுச்சந்தையில் 4 மணி நேரத்தில்ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. பக்ரீத் பண்டிகை முஸ்லிம்களின் புனிதமான பண்டிகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. தியாகத்திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையின் போது ஆட்டு இறைச்சிகளை ஏழைகளுக்கு தானமாக வழங்குவார்கள்

 

2

இதனால் ஆடுகள் விற்பனை அமோகமாக இருக்கும். இந்நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

 

இந்த பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில், மணப்பாறையில் புகழ்பெற்ற கால்நடை சந்தையின் ஒரு பகுதியில் ஆட்டுச்சந்தை நேற்று காலை தொடங்கியது. ரூ.1½ கோடிக்கு விற்பனை தமிழத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

 

ஆடுகளை வாங்கவும் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். இதனால் காலை முதலே சந்தை களைகட்டியதுடன் விற்பனையும் அமோகமாகவே இருந்தது. குறைந்தது ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரம் வரை விற்பனையானது. ஆட்டின் எடை, அதன் உடல் கட்டமைப்பு ஆகியவற்றை வைத்து தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை நடைபெற்றது.

 

விலை உச்சத்தை தொட்டாலும் ஆடு வாங்க வந்தவர்களின் ஆர்வம் குறையவில்லை. இதனால் சுமார் 4 மணி நேரத்தில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. இதனால் ஆடுகளை விற்க வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

 

 

3

Leave A Reply

Your email address will not be published.