நத்தாஷா பள்ளிவாசல் அருகே உள்ள அப்துல்லா உணவகத்திற்கு சீல் !

நத்தாஷா பள்ளிவாசல் அருகே உள்ள அப்துல்லா உணவகத்திற்கு சீல் !
திருச்சியில் நத்தர்ஷா பள்ளி வாசல் அருகே உள்ள அப்துல்லா என்கிற பெயரில் உணவகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் இந்த உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 05.07.2022 அன்று சோதனை நடந்தினர்.
அப்போது அந்த உணவகத்தில் சுகாதரமற்ற நிலையிலும், உணவு பாதுகாப்பு துறை உரிமம் இல்லாமலும் பொதுமக்கள் சாலையில் செல்வதற்கு இடையூறாகவும் செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து உணவகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
