திருச்சிராப்பள்ளி  மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

0
1

திருச்சிராப்பள்ளி  மாநகராட்சியில்   மேயர் மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி  மாண்புமிகு மேயர் மு.அன்பழகன், தலைமையில்  25.04.2022-ம் தேதி திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்  மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 17 கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.

இந்த கோரிக்கை மனுக்களில்  மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு  சாலை மேம்பாடு, பாதாளசாக்கடை இணைப்பு, சாலையோரகடைகள் ஆக்கிரமிப்புகள்,   கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.  ஆக்கிரமிப்புகள் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதாளசாக்கடை இணைப்பு உடனடியாக வழங்கவும், பொதுமக்களிடம் பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்கள்மீது உரிய தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முழுமையான நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும்  என்று அலுவலர்களுக்கு மேயர் தெரிவித்தார்.

2

மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ. முஜிபுர் ரகுமான், துணை மேயர்  ஜி. திவ்யா, நகரப்பொறியாளர் எஸ்.அமுதவல்லி, நகர்நல அலுவலர் எம்.யாழினி, செயற்பொறியாளர்கள் பி.சிவபாதம், ஜி.குமரேசன் , அவர்கள், மண்டலத்தலைவர்கள் த.துர்காதேவி, விஜயலட்சுமிகண்ணன், மற்றும் அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், அனைத்து மண்டல உதவி செயற்பொறியாளர்கள்,  பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்

3

Leave A Reply

Your email address will not be published.