சீர்மிகு நகரத்திட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள்: அரசின் தலைமை கூடுதல் செயலாளர் ஆய்வு

0
1

சீர்மிகு நகரத்திட்டத்தின் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் முடிவுள்ள பணிகளை ஆய்வு செய்வதற்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அரசின் தலைமை கூடுதல் செயலாளர் பொறுப்பு நிலையில் பணி ஓய்வு பெற்ற P.W.C. டேவிதார்,  திருச்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள்

மற்றும் முடிவுற்ற பணிகளான, அரியமங்கலம் குப்பை உரக்கிடங்கில் தேக்கமடைந்துள்ள திடக்கழிவுகளை விஞ்ஞான முறையில் தீர்வு காணும் பணி. பன்அடுக்கு கார் நிறுத்துமிட பணிகள்,  நந்திகோவில் தெரு பகுதியில் தினசரி சந்தை அமைக்கும் பணி, புராதான பூங்கா அமைக்கும் பணி, பாதாள சாக்கடை திட்டம் – அம்ரூத் நிதி பங்களிப்பு, சீர்மிகு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, கீழப்புலிவார் ரோடு பகுதியில் சாலை தடுப்புகள் அமைக்கும் பணி. மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கும் பணிகள்,

பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் விநியோகிக்கும் பணி, சத்திரம் பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணி,  சத்துணவு மையம் மற்றும் சீர்மிகு கழிவறை கட்டும் பணி, மாநகராட்சி கட்டிடங்களின் மேற்கூரை பகுதிகளில் சூரிய ஒளி மின்னாற்றல் சேமிப்பு தகடுகள் அமைக்கும் பணி, போக்குவரத்து பெயர் பலகைகள் அமைக்கும் பணி, புத்தூர் தினசரி சந்தை வளாகத்தில் புதியதாக வணிக வளாகம் கட்டும் பணி மேற்கொள்தல்.

2

பஞ்சக்கரை பகுதியில் திருச்சி சி.வி. ராமன்(STEM Park) பூங்கா அமைக்கும் பணி, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு (ICCC) அறை அமைக்கும் பணி. மரக்கடை பகுதியில் வணிக வளாக கடைகள் கட்டும் பணி, கீழரண் சாலை பகுதிகளில் மீன்சந்தை அமைக்கும் பணி மற்றும் இதரப்பணிகள், சிறுசந்தை கடைகள் அமைக்கும் பணி, லாரிகள் நிறுத்துமிடம் அமைக்கும் பணி. மதுரை ரோடு பகுதியில் மாநகராட்சி வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் வணிக வளாகம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் மரக்கடை பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி,  மற்றும் மரக்கடை பகுதிகளில் குடிநீர் பிரதான குழாய் மற்றும் பகிர்மான குழாய் புதுப்பிக்கும் பணி மேற்கொள்தல், குடிநீர் வழங்கல் அமைப்பினை புணரமைக்கும் பணிகள், மதுரை ரோடு பகுதியில் மாநகராட்சி வாகன நிறுத்துமிடப் பகுதியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் முதல் தளத்தில் சேவை மையம் மற்றும் ஆலோசனை மையம் கட்டும் பணி,

அபிவிருத்தி சார்ந்த பகுதிகளில் (ABD area) பாதாள சாக்கடை அமைப்புகளை புனரமைக்கும் பணிகள், பஞ்சப்பூர் பகுதியில் சூரியஒளி மின்நிலையம் அமைக்கும் பணி மற்றும் தார்சாலை அமைக்கும் பணி, அபிவிருத்தி பணிகள், மற்றும் பணி துவங்கும் நிலையில் உள்ள பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்,

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ. முஜிபுர் ரகுமான், நகரப்பொறியாளர் திருமதி. எஸ். அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் பி. சிவபாதம், ஜி. குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.