இந்தப்
புவிப்பரப்பில்
வாழ்ந்தவர்களிலும்…
இப்போதும்
வாழ்ந்து கொண்டே
இருப்பவர்களிலும்…
இந்த
மண் குறித்தும்…
மழைக்காலங்களில்
மண்ணுக்குள்ளே
நெளிகின்ற
மண்புழுக்கள்
குறித்தும்…
இந்த
நிலம் குறித்தும்…
இடுபொருட்களால்
நிலமதின் நச்சு
நீக்குதல் குறித்தும்…
நுண்ணிய
தீர்வும்…
நனிமிகு
தேடலும்
கொண்டவர்களில்…
எங்களின்
முதல்வன்
நீ.
வாடிய
பயிர்களுக்கு
உந்தன்
மூச்சுக் காற்றே
உயிர்ப் பச்சையம்
தந்தளித்து
உயிரூட்டியது…
வெடித்துச் சிதறிய
வயல்வெளிகளும்
காய்ந்து கிடந்த
காடுமேடுகளும்
உந்தன்
காலடிச் சுவடுகள்
பதிந்த பின்னரே
தங்களைத் தாங்களே
உயிர்ப்பித்துக்
கொண்டன.
வேளாண்
இதயங்களில்
இயற்கை வேளாண்மை
எனும்
எக்காலத்திலும்
இற்றுப் போகாத
விதைகளைத்
தூவி வைத்தவன்
நீ.
இப்போதும்
எங்களுக்கு
மீண்டும்
வேண்டும்
நீ.
எப்போது
வருவாய்
நீ…