திருச்சி மாநகராட்சியில் நுண் உரம் செயலாக்கம், மைய செயல்பாடு குறித்த ஆய்வு

0
1

திருச்சி மாநகராட்சி வார்டு குழு அலுவலகம் 5 வார்டு எண் 29க்கு உட்பட்ட குழுமிக்கரை நுண்உரம் செயலாக்க மையத்தில் மேயர் அன்பழகன், ஆணையர் முஜிபுர் ரகுமான், துணை மேயர் திவ்யா ஆகியோர் நுண் உரம் செயலாக்கம், மைய செயல்பாடு மற்றும் நுண்உரம் தயாரிக்கும் முறை குறித்தும் கேட்டறிந்து, ஆய்வு செய்தனர்.

உடன் வார்டு குழுத்தலைவர் விஜயலட்சுமிகண்ணன், மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

 

2

திருச்சி மாநகராட்சி வார்டு குழு அலுவலகம் 2 வார்டு எண் 17க்கு உட்பட்ட பூக்கொல்லை நுண்உரம் செயலாக்க மையத்தில் மேயர் அன்பழகன், சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், ஆணையர் முஜிபுர் ரகுமான், துணை மேயர் திவ்யா ஆகியோர் நுண் உரம் செயலாக்கம், மைய செயல்பாடு மற்றும் நுண்உரம் தயாரிக்கும் முறை குறித்தும் கேட்டறிந்து, ஆய்வு செய்தனர்.

உடன் வார்டு குழுத்தலைவர் மதிவாணன், மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

திருச்சி மாநகராட்சி வார்டு குழு அலுவலகம் 5 வார்டு எண் 29க்கு உட்பட்ட ஆழ்வார்தோப்பு, காயிதேமில்லத்நகர், சின்னச்சாமி நகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு குழுமிக்கரை சாலையில் பொதுநிதி 2020-2021-ன் கீழ் ரூ.95.00 இலட்சம் மதிப்பீட்டில் மருந்தகம், பரிசோதனை நிலையம் மற்றும் 6 படுக்கைகள் வசதியுடன் கூடிய புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகளை மேயர் அன்பழகன் ஆய்வு செய்தார்.

உடன் ஆணையர் முஜிபுர் ரகுமான், துணை மேயர் திவ்யா, வார்டு குழுத்தலைவர் விஜயலட்சுமிகண்ணன்,  மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

 

 

 

 

3

Leave A Reply

Your email address will not be published.