திருச்சியில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் நடைமேம்பாலம் – அதிகாரிகள் ஆய்வு

0
1

திருச்சி மாநகரில் சத்திரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம் பகுதிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு இல்லாமல் சாலையை கடந்து வருகின்றனர்.

பாதசாரிகள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, நகரின் நெரிசலான பகுதிகளில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டுமென நீண்டகாலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம், மாநகர போலீசார் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கொண்ட தணிக்கை குழுவினர் நடைமேம்பாலம் அமைக்க வேண்டிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

2

அதில் சத்திரம் பஸ் நிலைய பகுதியில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மாணவர்கள் சாலையில் நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .

மேலும் காலேஜ் ரோடு, சென்னை ட்ரங்க் ரோடு, கரூர் ரோடு, மேலசிந்தாமணி சாலை ஆகிய பகுதிகளிலும் பாதசாரிகள் பாதிப்படைந்து வருகின்றனர் என்பதையும் கண்டறிந்துள்ளனர்

3

Leave A Reply

Your email address will not be published.