திருச்சி அருகே சரக்கு வேன் மோதி மாடுபிடி வீரர் பலி

0
1

திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார்(24). மாடுபிடி வீரரான இவர் நேற்று பெரம்பலூர்,அன்னமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள, தனது காளையை சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

அவருடன் திருச்சி தாரநல்லூர் ராசா(18), மாகாளிகுடி அரவிந்த்(27), சிவா(18), பிரதாப்(17), வளவனூர் சிலம்பரசன்(30), ராகவன்(25), மருதூர் மருதுபாண்டி(20) ஆகியோரும் சென்றனர்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தபோது,, சிறுகனூரை அடுத்த கொணலை அருகே மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பஸ், சரக்கு வேன் மீது மோதியது.

2

இதில் வேனின் பின்பகுதியில் காளையை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த அஜித்குமார் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 7 பேரும் காயமடைந்தனர். காளை உயிர் தப்பியது.

அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீசார் விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் அழகரை(40) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.