திருச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு மீண்டும் விமான போக்குவரத்து தொடக்கம்

சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை வழங்கப்படாமல் இருந்த நிலையில், மீண்டும் கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவையை அந்த நிறுவனம் கடந்த 27-ந் தேதி முதல் தொடங்கி உள்ளது.
இந்த விமானம் திருச்சியில் இருந்து புதன், வெள்ளி, சனி உள்ளிட்ட நாட்களில் இரவு 10.10 மணிக்கு திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு இயக்கப்படும் என்றும், மீண்டும் கோலாலம்பூரில் இருந்து திங்கள், வியாழன், ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் இயக்கப்பட உள்ளதாகவும், இந்த விமானம் இரவு 7.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
