பிரமோற்சவ விழா
பஞ்சபூதங்களில்நீர்தலமானதிருவானைக்காவலில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரமோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரமோற்சவ விழா பிப்ரவரி 11-ல் கொடியேற்றத்துடன் தொடங்கி, வருகிற ஏப்ரல் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.
பங்குனி தேரோட்டம்
பங்குனி தேரோட்டம் வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.
பஞ்சப்பிரகார விழா
ஏப்ரல் 16-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். 17-ந்தேதி சாயாஅபிஷேகம், 18-ந் தேதி மண்டலாபிஷேகத்துடன் பிரமோற்சவ விழா நிறைவடைகிறது.