திருச்சி, புள்ளம்பாடி குழுந்தாளம்மன் கோவிலில் ஜல்லிக்கட்டு

0
1

 ஜல்லிக்கட்டு

புள்ளம்பாடி குழுந்தாளம்மன் கோவிலில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது.
இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 638 காளைகளும் மற்றும் 333 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். காலை 8.45 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2.30 மணி வரை  நடைபெற்றது.

முதல் பரிசு

2

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் முதல்பரிசு பெற்று சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அரியலூரை சேர்ந்த கரண் 2-ம் இடத்தையும், புதுக்கோட்டையை சேர்ந்த மவுரிஸ் 3-வது பரிசையும் பெற்றனர்.

பரிசுகள்

உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், கட்டில்கள், எல்.இ.டி.டி.வி.க்கள், சைக்கிள், மின்விசிறி, சில்வர் அண்டாக்கள், அயன்பாக்ஸ், ஹெல்மெட் என ரூ.6 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

வீரர்கள் காயம்

காளைகள் முட்டியதில் 15 வீரர்கள் காயமடைந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.