எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் திருச்சி வருகை
எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள்
தலைநகர் புதுடெல்லியில் இருந்து, உலக மகளிர் தினத்தையொட்டி, கடந்த 8-ந்தேதி, எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் 36 பேர், மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி,. பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மராட்டியம், கர்நாடகா, தெலுங்கானா வழியாக 6 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து,
திருச்சி வருகை
கடந்த 24-ந்தேதி தமிழக நுழைவு வாயிலான ஓசூருக்கு வந்த எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் சென்னை செல்லும் வழியில் 27ம் தேதி திருச்சி வந்தனர்.
திருச்சியில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமைச்சர்கள் பங்கேற்பு
விழாவில், அமைச்சர் கே.என்.நேரு, மேயர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்